உரும் உறழ் கற்கள் கொண்டு - இடிபோல் பகைவர்க்குத் துன்பம் செய்யும் கற்களைக் கொண்டு; கூற்றமும் நடுக்குற- எமனும் நடுங்குமாறு; தோள்புடை கொட்டி- தோள்களைத் தட்டிக் கொண்டு; அண்ட கோடிகள் - பல உலகின் பல்வேறு மூலை முடுக்குகளும்; அடுக்கு அழிந்து- அடுக்குமுறை குலைந்து; உலைவுற- வருந்துமாறு; ஆர்த்தார்- ஆரவாரம் செய்தார். |
(6) |
இருபடையும் கைகலத்தல் |
9537. | அரக்கன் சேனையும், ஆர் உயிர் வழங்குவான் |
| அமைந்த |
| குரக்கு வேலையும், ஒன்றொடு ஒன்று, எதிர் எதிர் |
| கோத்து, |
| நெருக்கி நேர்ந்தன, நெருப்பு, இடை பொடித்தன; |
| நெருப்பின் |
| உருக்கு செம்பு என, அம்பரத்து, ஓடினது, உதிரம். |
|
அரக்கன் சேனையும்- இராவணன் படையும்; ஆருயிர் வழங்குவான் அமைந்த - தம் அரிய உயிரைப் போரில் அழிக்குமாறு நின்ற; குரக்கு வேலையும் - குரங்கின் கடல் போன்ற படையும்; ஒன்றோடு ஒன்று எதிர் எதிர் கோத்து- ஒன்றுடன் ஒன்று எதிர் எதிராகக் கைகலந்து; நெருக்கி நேர்ந்தன- நெருக்கியவாறு போர் புரிந்தன; நெருப்பு இடை பொடித்தன- தாக்குவதால் இரு படைக்கும் இடையில் நெருப்புத் தோன்றின; நெருப்பின் உருக்கு செம்பு என- தீயிலே காய்ச்சி உருக்கிய செம்பு போல; உதிரம் அம்பரத்து ஓடினது - இரத்தம் கடலை நோக்கி ஓடியது. |
(7) |
9538. | அற்ற வன் தலை அறு குறை எழுந்து எழுந்து, |
| அண்டத்து |
| ஒற்ற, வானகம் உதய மண்டிலம் என ஒளிர, |
| சுற்றும் மேகத்தைத் தொத்திய குருதி நீர் துளிப்ப, |
| முற்றும் வையகம் போர்க் களம் ஆம் என முயன்ற. |
|
அற்ற வன்தலை- அறுபட்ட வலிய தலை; அறுகுறை எழுந்து எழுந்து - தலை அற்ற உடல் குறையிலிருந்து எழுந்தெழுந்து; அண்டத்து ஒற்ற - மேலே போய் ஒற்றுதலால்; வானகம் உதய மண்டிலம் என ஒளிர- விண்ணில் எழுகின்ற கதிரவன் போல ஒளி |