பக்கம் எண் :

 வேல் ஏற்ற படலம்203

வீச;   சுற்றும்   மேகத்தைத் தொத்திய-  வானத்தில்  மிதந்து
வரும்     மேகத்தில்    பதிந்துள்ள;   குருதிநீர்    துளிப்ப-
இரத்தநீர்    மழையாகத்     துளிர்க்க;   வையகம்   முற்றும்
போர்க்களம் ஆம்   என   முயன்ற
-  உலகம்    முழுவதும்
போர்க்களம் போன்று தோன்றுமாறு காட்சி அளித்தன.
 

(8)
 

9539.

தூவி அம் பெடை அரிஇனம் மறிதர, சூழி

தூவி, அம்பு எடை சோர்ந்தன, சொரி உடல் சுரிப்ப,

மே வியம் படை படப் படர் குருதியின் வீழ்ந்த,

மேவி அம் படைக் கடலிடை, குடரொடு மிதந்த.

 

அம்படைக் கடலிடை மேவி- (யானைகள்) சேனைக் கடலிடைச்
சேர்ந்து   (இலக்குவன்  அம்பு    தொடுக்க   எடுத்தலால்);   தூவி
அம்பெடை அரியினம் மறிதர
- சிறகுகளை உடைய அழகிய  பெண்
வண்டோடு கூடிய அழகிய ஆண் வண்டுக் கூட்டம் மீண்டு போகுமாறு;
சூழி   தூவி   -  முகபடாத்தை   வீசி    எறிந்து;    சோர்ந்தன
சோர்வடைந்தனவாய்;   வியம்மே   படைபடப்   படர் குருதியின்
சொரியுடல் சுரிப்ப  வீழ்ந்த
   -   வியத்தற்குரிய   அம்புப்  படை
மேலே படப்பட பரந்து செல்லும் இரத்தத்தில் சுழன்று அமிழ்ந்து உடல்
வீழ; அம்பு எடை குடரொடு மிதந்த- அம்பின் மிகுதியால் பொருந்தி
வெளிப்பட்ட குடரொடு மிதப்பவாயின.
 

சூழி   தூவி என்பதால் யானையின் செயல் வெளிப்படும். இச்செய்யுள்
யமகம்   என்னும்    சொல்லணி.   இது    முன்னிரண்டு    அடிகளில்
ஒருவகையாகவும்   பின்னிரண்டு   அடிகளில்   மற்றொரு  வகையாகவும்
அமைந்துள்ளது.
  

(9)
 

9540.

கண் திறந்தன கணவர்தம் முகத்து அவர் முறுவல்

கண் இறந்த அன மடந்தையர், உயிரொடும்

கலந்தார் -

பண்டு இறந்தன பழம் புணர்வு அகம் புக, பன்னி,

பண் திறந்தன புலம்பு ஒலி, சிலம்பு ஒலி பனிப்ப.

 

பண்டு  இறந்தன பழம்   புணர்வு    அகம்புக-   முன்பு தம் 
கணவருடன் கழித்த பழைய புணர்ச்சி நிகழ்ச்சிகளை  நினைத்து; பன்னி
பண் திறந்தன புலம்பு    ஒலி சிலம்பு ஒலி   பனிப்ப
-   பலவாறு
வாய்விட்டுப் பாடினாற் போன்று புலம்புகின்ற ஒலியும் சிலம்பின் ஒலியும்
கலந்து நடுங்கியவாறு ஒலிக்க; கணவர் கண் திறந்தன தம்