முகத்து- கணவர் தம் கண்கள் விழித்துள்ளனவாகிய முகங்களில்; அவர் முறுவல் கண்டு இறந்த அன மடந்தையர்- அவர்களுடைய சிரிப்பைப் பார்த்து மகிழ்ந்து தம் உடலை விட்டுப் பிரிந்தவர் போன்ற கற்புடை மகளிர்; உயிரொடும் கலந்தார்- தம் இறந்த கணவருடைய உயிரொடு ஒன்றாய்க் கலந்தனர். |
(10) |
9541. | ஏழும் ஏழும் என்று உரைக்கின்ற உலகங்கள் யாவும் |
| ஊழி பேர்வதே ஒப்பது ஓர் உலைவுற, உடற்றும் |
| நூழில் வெஞ் சமம் நோக்கி, அவ் இராவணன் |
| நுவன்றான்- |
| 'தாழ் இல் என் படை தருக்கு அறும்' என்பது ஓர் |
| தன்மை. |
|
ஏழும் ஏழும் என்று உரைக்கின்ற உலகங்கள் யாவும் - கீழ் ஏழு உலகம் மேல் ஏழு உலகம் எனச் சொல்லும் உலகங்கள் பதினான்கும்; ஊழி பேர்வது ஒப்பது- ஊழிக்கால முடிவில் நிலை பெயர்வது போன்ற; ஓர் உலைவுற உடற்றும்- ஒரு அழிவு உண்டாகப் போரிடுகின்ற; நூழில் வெஞ்சமம் நோக்கி- பகைவரைக் கொல்லும் கொடிய போர்க்களத்தைப் பார்த்து; அவ்இராவணன்- அந்த இராவணன்; தாழி இல் என்படை தருக்கு அறும் என்பது ஓர் தன்மை நுவன்றான் - தாழ்வு இல்லாத என் சேனை இனிச் செருக்கு அழியும் என்ற ஒரு தன்மையைக் கூறினான். |
(11) |
9542. | மரமும் கல்லுமே, வில்லொடு வாள், மழு, சூலம் |
| அரமும், கல்லும், வேல் முதலிய அயில் படை அடக்கி, |
| சிரமும் கல் எனச் சிந்தலின், சிதைந்தது, என் |
| சேனை |
| உரமும் கல்வியும் உடையவன் செரு நின்றது |
| ஒருபால். |
|
உரமும் கல்வியும் உடையவன் செரு நின்றது ஒருபால்- வலிமையும் கல்வியறிவும் உள்ள அனுமான் போர் செய்யும் ஒரு பக்கத்தில்; மரமும் கல்லுமே வில்லொடு வாள் மழு சூலம் அரமும் கல்லும் வேல் முதலிய அயில் படை அடக்கி- வானரர்கள் வீசும் மரங்களும் கற்களுமே கொண்டு வில்லும் வாளும் மழுவும் சூலமும் அரத்தையும் அழிக்கத்தக்க உறுதி மிக்க வேல் முதலிய |