பக்கம் எண் :

 வேல் ஏற்ற படலம்205

கூரிய  படைகளையும்   அடக்கிவிட்டு;   சிரமும் கல் எனச்
சிந்தலின்
-   அரக்கர்களின்   தலைகளையும்  கற்கள் போல
உருளுமாறு சிந்துவதால்; என் சேனை சிதைந்தது - என்படை
அழிந்தது.
  

(12)
 

9543.

அழலும் கண் களிறு அணியொடும் துணி படும்;

ஆவி

சுழலும் பல் படைத் தொகுதியும்; அன்னதே சுடர்த்

தேர்;

சுழலும் சோரி நீர் ஆற்றொடும் கடலிடைக்

கலக்கும் -

குழலும் நூலும்போல் அனுமனும் தானும் அக் குமரன்.

 

குழலும் நூலும் போல்   -   நெய்கின்ற   குழலும்   அதைத்
தொடர்ந்து செல்லும் நூலும் போல; அனுமனும் தானும் அக்குமரன்
- ஒருவர்   பின் ஒருவராகத் தொடர்ந்து அநுமனும் இலக்குமணனும்
போர்   செய்தனர்;   அழலும்    கண்   களிறு- சினம்   மிக்க
கண்ணுடைய யானைகள்; அணியொடும்   துணிபடும்  -  அணிந்த
அணிகலன்களோடு  துண்டுபடும்; பல்படைத் தொகுதியும்  ஆவி
சுழலும்
- பலவகைப்   படை   வீரரின்   கூட்டமும் உயிர் சுழன்று
நிற்கும்;   சுடர்த்தேர்   அன்னதே   -   ஒளிமிக்க   தேர்களும்
சுழலும்;  கழலும் சோரிநீர்  ஆற்றொடும் கடலிடைக் கலக்கும்
- இறந்து பட்ட   உடம்பிலிருந்து   இரத்தம் ஆற்று நீரோடு கலந்து
கடலிடையே சேரும்.
 

(13)
 

9544.

'வில்லும் கூற்றுவற்கு உண்டு' என, திரிகின்ற வீரன்

கொல்லும் கூற்று எனக் குறைக்கும், இந் நிறை

பெருங் குழுவை;

ஒல்லும் கோள் அரி, உரும், அன்ன குரங்கினது

உகிரும்

பல்லும் கூர்க்கின்ற; கூர்க்கில அரக்கர்தம் படைகள்.

 

வில்லும் கூற்றுவற்கு   உண்டு   என  திரிகின்ற வீரன்-
இயமனுக்குத் தண்டேயன்றி  வில்லும்   படையாக   உண்டு எனக்
கூறும்படி     போர்க்களத்தில்      திரிகின்ற       இலக்குவன்;
கொல்லும் கூற்று  எனக்   குறைக்கும்   -   கொல்லுவதைத்
தொழிலாக   கொண்ட   யமன் போல் அரக்கர் எண்ணிக்கையைக்
கொன்று குறைக்