கின்றான்; இந்நிறை பெருங்குழுவை- இந்நிலையில் வானரர் பெருங் கூட்டத்தை; ஒல்லும் கோள் அரி- வெல்லுதற்குரிய வலிமையுடைய சிங்கமும்; உரும் அன்ன- இடியும் போன்ற; குரங்கினது உகிரும் பல்லும் கூர்க்கின்ற - அனுமனாம் குரங்கின் நகமும் பல்லும் அரக்கர் படையை அழிக்கக் கூர்மையுடையன; அரக்கர் தம் படைகள் கூர்க்கில- அரக்கரின் படைகள் வானரங்களை அழிக்கக் கூர்மை பெறவில்லை. |
(14) |
இராவணன் கொதித்தல் |
9545. | 'கண்டு நின்று, இறைப் பொழுது, இனிக் காலத்தைக் |
| கழிப்பின், |
| உண்டு கைவிடும் கூற்றுவன், நிருதர் பேர் உயிரை; |
| மண்டு வெஞ் செரு நான் ஒரு கணத்திடை மடித்தே |
| கொண்டு மீள்குவென், கொற்றம்' என்று இராவணன் |
| கொதித்தான். |
|
இறைப்பொழுது- சிறிது போழ்து இங்ஙனம்; கண்டு நின்று இனிக் காலத்தைக் கழிப்பின்- இலக்குவன் அனுமன் புரியும் போரைக் கண்டு காலத்தைக் கழிப்பேன் ஆனால்; நிருதர் பேர் உயிரை உண்டு கை விடும் கூற்றுவன் - அரக்கரின் பெருமை மிக்க உயிர்களை உண்டு போர்க்களத்தை விட்டுக் கூற்றுவன் போய் விடுவான்; மண்டு வெஞ்செரு- வீரர்கள் நெருங்கிப் புரியும் போரில்; நான் ஒரு களத்திடை மடித்தே கொற்றம் கொண்டு மீள்குவென் - நான் ஒரு நொடிப்பொழுதில் குரங்குகளைக் கொன்று வெற்றி பெற்று மீள்வேன்; என்று இராவணன் கொதித்தான்- எனச் சொல்லி இராவணன் வெதும்பினான். |
(15) |
9546. | ஊதை போல்வன, உரும் உறழ் திறலன, உருவிப் |
| பூதலங்களைப் பிளப்பன, அண்டத்தைப் பொதுப்ப, |
| மாதிரங்களை அளப்பன, மாற்ற அருங் கூற்றின் |
| தூது போல்வன, சுடு கணை முறை முறை துரந்தான். |
|
ஊதை போல்வன- காற்றைப் போல் வேகமாகச் செல்வனவும்; உரும் உறழ் திறலன - இடிபோல் அழிக்கும் வலிமை பெற்றனவும்; உருவிப் பூதலங்களைப் பிளப்பன- உலகின் ஊடுருவிப் பிளப்பனவும்; அண்டத்தைப் பொதுப்ப- வானத்தைத் துளைப்பன |