வும்; மாதிரங்களை அளப்பன- திசைகளை அளப்பனவும்; மாற்றருங் கூற்றின் தூது போல்வன- மாற்றுதற்கு முடியாத யமனின் தூதுவர்களைப் போல்வனவும்; சுடுகணை முறை முறை துரந்தான் - தீய்க்கின்ற அம்புகளை முறை முறையாகப் பகைவர் மீது (இராவணன்) செலுத்தினான். |
(16) |
9547. | ஆளி போன்று உளன் எதிர்ந்த போது, அமர்க் |
| களத்து அடைந்த |
| ஞாளி போன்று உள என்பது என்? நள் இருள் |
| அடைந்த |
| காளி போன்றனன் இராவணன்; வெள்ளிடைக் கரந்த |
| பூளை போன்றது, அப் பொரு சினத்து அரிகள்தம் |
| புணரி. |
|
எதிர்ந்த போது ஆளி போன்று உளன்- (இராவணன்) எதிரிட்டபோது சிங்கம் போல் விளங்கினான்; அமர்க்களத்து- போர்க்களத்தில்; அடைந்த ஞாளி போன்று - (வானரப்படை) அடைந்தபோது நாயைப்போல இருந்தது என்பதால் பயன் என்ன?; இராவணன் நள்ளிருள் அடைந்த காளி போன்றனன் - இராவணன் செறிந்த இருட்டிலே வந்த காளி தெய்வத்தைப் போன்றான்; அப்பொரு சினத்து அரிகள் தம் புணரி - அந்தப் போரிடும் கோபம் உடைய வானரர் படைக்கடல்; வெள்ளிடைக் கரந்த பூனை போன்றது- வெற்றிடத்தில் பொருந்திய பூனைப் பூக்கள் போன்றது. |
(17) |
இலக்குவன் - இராவணன் போர் |
9548. | இரியல் போகின்ற சேனையை இலக்குவன் விலக்கி |
| 'அரிகள்! அஞ்சன்மின், அஞ்சன்மின்' என்று அருள் |
| வழங்கி, |
| திரியும் மாருதி தோள் எனும் தேர்மிசைச் சென்றான்; |
| எரியும் வெஞ் சினத்து இராவணன் எதிர் புகுந்து |
| ஏற்றான். |
|
இரியல் போகின்ற சேனையை இலக்குவன் விலக்கி - தோற்று ஓடுகின்ற வானர சேனையை இலக்குவன் தடுத்து; 'அரிகள்! அஞ்சன்மின், அஞ்சன்மின்' என்று அருள் வழங்கி - 'வானரர்களே! |