பயப்படாதீர்கள், பயப்படாதீர்கள்' என்று அருள் மொழி கூறி; திரியும் மாருதி தோள் எனும் தேர்மிசைச் சென்றான் - திரிகின்ற அனுமானின் தோள் என்னும் தேர் மேல் ஏறிச் சென்றான்; எரியும் வெஞ்சினத்து இராவணன் எதிர் புகுந்து ஏற்றான்- எரிகின்ற கொடிய கோபத்தை உடைய இராவணன் எதிரே சென்று எதிர்த்தான். |
(18) |
9549. | ஏற்றுக் கோடலும், இராவணன் எரி முகப் பகழி |
| நூற்றுக் கோடியின்மேல் செலச் சிலைகொடு நூக்க, |
| காற்றுக்கு ஓடிய பஞ்சு எனத் திசைதொறும் கரக்க, |
| வேற்றுக் கோல்கொடு விலக்கினன், இலக்குவன் |
| விசையால். |
|
ஏற்றுக் கோடலும்- (அவ்வாறு இலக்குவன் எதிர் நின்று) எதிர்த்த அளவில்; இராவணன் எரிமுகப் பகழி- இராவணன் நெருப்பை முனையிலே கொண்ட அம்புகளை; நூற்றுக் கோடியின் மேல் - நூறு கோடிக்கு மேலாக; செலச் சிலை கொடு நூக்க- செல்லுமாறு வில்லால் எய்ய; காற்றுக்கு ஓடிய பஞ்சு என- காற்றுக்கு எதிர் நிற்கமுடியாமல் ஓடிப் பறந்த பஞ்சுபோல்; திசைதொறும் கரக்க- திசைகள் தோறும் சென்று மறையுமாறு; இலக்குவன் வேற்றுக்கோல் கொடு விசையால் விலக்கினன்- இலக்குவன் அவற்றிற்கு எதிரான அம்புகள் கொண்டு விசையால் எதிர் விலக்கினான். |
(19) |
9550. | விலக்கினான் தடந் தோளினும் மார்பினும், விசிகம் |
| உலக்க உய்த்தனன், இராவணன்; ஐந்தொடு ஐந்து |
| உருவக் |
| கலக்கம் உற்றிலன் இளவலும், உள்ளத்தில் |
| கனன்றான் |
| அலக்கண் எய்துவித்தான், அடல் அரக்கனை, |
| அம்பால். |
|
விலக்கினான் தடந்தோளினும் மார்பினும் - அவ்வாறு விலக்கியவனாம் இலக்குவனின் பெரிய தோளிலும் மார்பிலும்; இராவணன் ஐந்தொடு ஐந்து விசிகம் உலக்க உய்த்தனன்- இராவணன் பத்து அம்புகளை இலக்குவனின் வலிமை குறையுமாறு விடுத்தான்; உருவக் கலக்கம் உற்றிலன் இளவலும்- |