பக்கம் எண் :

 வேல் ஏற்ற படலம்209

உடம்பின்  அவ்வம்புகள்  ஊடுருவக்  கலக்கம்  கொள்ளாத
இலக்குவனும்; உள்ளத்தில் கனன்றான் - மனத்தில் கோபம்
கொண்டு; அடல் அரக்கனை - வலிமை மிக்க இராவணனை;
அம்பால் அலக்கண் எய்துவித்தான் - தன்  அம்புகளால்
துன்பமுறச் செய்தான். 
 

(20)
 

9551.

காக்கல் ஆகலாக் கடுப்பினில் தொடுப்பன கணைகள்
நூக்கினான்; கணை நுறுக்கினான், அரக்கனும், 

'நூழில்

ஆக்கும் வெஞ் சமத்து அரிது இவன்தனை வெல்வது

அம்பால்

நீக்கி, என் இனிச் செய்வது?' என்று இராவணன்

நினைந்தான்.

 

காக்கல் ஆகலாக் கடுப்பினில் கணைகள் தொடுப்பன -
தடுத்தற்கு  முடியாத  விரைவொடு   அம்புகளை  (இலக்குவன்);
நூக்கினான் -செலுத்தினான்; கணை நுறுக்கினான் அரக்கனும்-
செலுத்திய அம்புகளை  நுறுங்கச் செய்த   இராவணனும்; நூழில்
ஆக்கும் வெஞ்சமத்து
- கொன்று  குவிக்கும் கொடிய போரில்;
இவன்தனை வெல்வது அரிது  -  இவனை  வெற்றி காண்பது
முடியாது; அம்பால் நீக்கி - அம்பினால் போரிடுவதை விலக்கி;
இனி  என் செய்வது  -  இனிமேல்  என்ன செய்வது; என்று
இராவணன்   நினைந்தான் 
-  என  இராவணன்  ஆழமாகச்
சிந்தித்தான். 
  

(21)
 

இராவணன் மோகப்படையும் இலக்குவன் ஆழிப்படையும்
 

9552.

'கடவுள் மாப் படை தொடுக்கின், மற்று அவை 

முற்றும் கடக்க

விடவும் ஆற்றவும் வல்லனேல், யாரையும் வெல்லும்; 
தடவும் ஆற்றலைக் கூற்றையும்; தமையனைப் போலச் 
சுடவும் ஆற்றும் எவ் உலகையும்; எவனுக்கும்

தோலான்.

 

கடவுள் மாப்படை தொடுக்கின் - பெரிய தெய்வ அம்புகளைத்
தொடுத்தால்;  மற்று  அவை  முற்றும் கடக்கவிடவும் ஆற்றவும்
வல்லனேல்
- அவ்வம்புகள் எல்லாவற்றையும் வெல்லவும்