பக்கம் எண் :

 இராவணன் சோகப் படலம்21

இந்திரசித்தின் உடலோடு இராவணன் இலங்கை புகல்
 

9225.

என்பன பலவும் பன்னி, எடுத்து அழைத்து, இரங்கி 

ஏங்கி,

அன்பினால் மகனைத் தாங்கி, அரக்கியர் அரற்றி  

வீழ,

பொன் புனை நகரம் புக்கான்; கண்டவர் புலம்பும்  

பூசல்,

ஒன்பது திக்கும், மற்றை ஒரு திக்கும், உற்றது  

அன்றே.

 

என்பன பலவும் பன்னி- என்பன போன்ற பலவற்றையும்
சொல்லிக்கொண்டு; எடுத்து அழைத்து இரங்கி ஏங்கி- உரத்த
குரலில் மகனை அழைத்து   இரக்கமுற்று வருந்தி; அன்பினால்
மகனைத் தாங்கி
- அன்பினால் மகனுடைய உடம்பைத் தூக்கிக்
கொண்டு; அரக்கியர்  அரற்றி  வீழ  பொன் புனை  நகரம்
புக்கான்  
-      அரக்கியர்களெல்லாம்   அரற்றிக்கொண்டு
சோர்ந்து வீழப் பொன்கொண்டு   புனைந்த இலங்கை நகரத்தில்
புகுந்தான்; கண்டவர் புலம்பும் பூசல் - அதனைக் கண்டவர்கள்
புலம்பும் அழுகை ஒலி; ஒன்பது திக்கும், மற்றை ஒரு திக்கும்,
உற்றது அன்றே
- பத்துத் திசைகளிலும் பரவியது.
 

பூசல் - அழுகை ஆரவாரம். 
 

(40)
 

9226. 

கண்களைச் சூல்கின்றாரும், கழுத்தினைத் 

தடிகின்றாரும்,

புண் கொளத் திறந்து, மார்பின் ஈருளைப் 

போக்குவாரும்

பண்கள் புக்கு அலம்பும் நாவை உயிரொடு 

பறிக்கின்றாரும்,-

எண்களில் பெரிய ஆற்றார் - இருந் துயர் பொறுக்கல் 

ஆற்றார்.

 

இருந்துயர் பொறுக்கல் ஆற்றார் கண்களைச் சூழ்கின்றாரும்
-  (இந்திரசித்து  இறந்த)   அந்தப்   பெரிய   துயரைப்   பொறுக்க
முடியாதவராய்  கண்களைத் தோண்டுகின்றவர்களும்; கழுத்தினைத்
தடிகின்றாரும்
-    தம்    கழுத்தினை   வெட்டுகின்றவர்களும்;
புண்கொள மார்பின் திறந்து ஈருளைப் போக்குவாரும் - புண்