பக்கம் எண் :

210யுத்த காண்டம் 

தாங்கவும் வலிமை யுடையவன் ஆனால்; யாரையும் வெல்லும்-
எல்லாரையும் வெல்லுவான்; கூற்றையும் ஆற்றலைத் தடவும்-
கூற்றுவனையும், வலிமையை ஆராய்ந்து பார்க்கும்; தமையனைப்
போல
- இராமனைப் போல்; எவ்வுலகையும் சுடவும் ஆற்றும்-
எல்லா உலகங்களையும்  சுட்டெரிக்கவும்  முடியும்; எவனுக்கும்
தோலான்
- யார்க்கும் தோற்கமாட்டான். 
 

(22)
 

9553.

'மோகம் ஒன்று உண்டு, முதலவன் வகுத்தது 

முன்னாள்;

ஆகம் அற்றது, கொற்றமும் சிவன்தனை அழிப்பது;
ஏகம் முதலிய விஞ்சையை இவன்வயின் ஏவி, 
காகம் உற்று உழல் களத்தினில் கிடத்துவென் 

கடிதின்'-

 

மோகம் ஒன்று உண்டு  - மோகம் என்பது ஒன்று உள்ளது;
முன்னாள் முதலவன் வகுத்தது - தொடக்க  காலத்தில்  முதற்
கடவுள் இயற்றியது; ஆகம் அற்றது- கண்ணால் காணும் வடிவம்
இல்லாதது; கொற்றமும் சிவன்தனை அழிப்பது - வெற்றியையும்
சிவனின் ஆற்றலையும் அழிக்கும் ஆற்றலுடையது; ஏகம் முற்றிய
விஞ்சையை  
-  தனித்தன்மை  பொருந்திய  இந்த விஞ்சையை;
இவன் வயின் ஏவி - இலக்குவன் மீது செலுத்தி; காகம் உற்று
உழல் களத்தினில் 
-  பிணந்தின்ன   வரும் காகங்கள் திரியும்
போர்க்களத்தில்;  கடிதின்  கிடத்துவென் -  விரைந்து கிடக்கச்
செய்வேன். 
  

(23)
 

9554.

என்பது உன்னி, அவ் விஞ்சையை மனத்திடை 

எண்ணி,

முன்பன்மேல் வரத் துரந்தனன்; அது கண்டு முடுகி,
அன்பின் வீடணன் 'ஆழியான் படையினின் அறுத்தி'
என்பது ஓதினன்; இலக்குவன் அது தொடுத்து

எய்தான்.

 

என்பது   உன்னி   -   என்பது   எண்ணி; அவ்விஞ்சையை
மனத்திடை எண்ணி  
-   அந்த  மோகன   விஞ்சையை   மனத்தில்
நினைத்து;   முன்பன்   மேல்  வரத்துரந்தனன்  -   வலியவனாம்
இலக்குவன் மேல்   செல்ல   விடுத்தான்;   அன்பின்  வீடணன் 
அன்புடைய வீடணன்; அது கண்டு முடுகி, ஆழியான் படையினின்