பக்கம் எண் :

 வேல் ஏற்ற படலம்211

அறுத்தி   -   அதனைக்  கண்டு விரைந்து சக்கரப் படையுடைய
நாராயணனது கணையால் இதனை அறுப்பாயாக; என்பது ஓதினன்
-  என்பதைக் கூறினான்; இலக்குவன் அது தொடுத்து எய்தான்
- இலக்குவன் அந்த நாராயணன் அம்பைப் பூட்டி விடுத்தான்.
 

(24)
 

வீடணனால் படைவலி அழிய, இராவணன் அவன் மேல் வேல் எறிதல்
 

9555.

வீடணன் சொல, விண்டுவின் படைக்கலம் விட்டான்,
மூடு வெஞ் சின மோகத்தை நீக்கலும், முனிந்தான்
'மாடு நின்றவன் உபாயங்கள் மதித்திட, வந்த
கேடு தம்நமக்கு' என்பது மனம்கொண்டு கிளர்ந்தான்.
 

வீடணன் சொல- வீடணன் சொல்ல; விண்டுவின் படைக்கலம்
விட்டான் 
   -   அவன்   சொல்லியபடி   நாராயணனது   அம்பை
விட்டான்; மூடு  வெஞ்சின  மோகத்தை நீக்கலும்- தன்னை மூடி
மயக்கவந்த   கொடிய   சினத்தையுடைய   மோகத்தை  இலக்குவன்
விலக்கலும்; முனிந்தான்  -   இராவணன்   வெகுண்டான்;   மாடு
நின்றவன்  உபாயங்கள்  மதித்திட 
-  பக்கத்திலிருந்த வீடணன்
உபாயங்களைச் சொல்லிட அதை  இலக்குவன் மதித்து  ஏற்றிட; கேடு
நம் தமக்கு வந்த
- நமக்குக் கேடு வந்தன;என்பது மனங்கொண்டு
கிளர்ந்தான்
- என்பதை உளத்தில் எண்ணிக் கிளர்ச்சியுற்றான். 
 

(25)
 

9556.

மயன் கொடுத்தது, மகளொடு; வயங்கு அனல் 

வேள்வி,

அயன் படைத்துளது; ஆழியும் குலிசமும் அனையது;
உயர்ந்த கொற்றமும் ஊழியும் கடந்துளது; உருமின்,
சயம்தனைப் பொரும் தம்பியை, உயிர் கொளச்

சமைந்தான்.

 

மகளொடு மயன் கொடுத்தது - (முன்னர், திருமணத்தின் போது
இராவணனுக்கு)   மண்டோதரியாம்   மகளொடு   மயன்  அளித்தது;
வயங்கு அனல் வேள்வி அயன் படைத்துளது - பிரமனால் யாகத்
தீயில் படைக்கப்பட்ட படையாம்; ஆழியும்  குலிசமும்  அனையது
- திருமாலின் சக்கரப்படையும் இந்திரனின் வச்சிரப்படையும் போன்றது;
உயர்ந்த கொற்றமும் ஊழியும்