பக்கம் எண் :

212யுத்த காண்டம் 

கடந்துளது   -   உயர்ந்த     வெற்றி    அளிப்பதிலும்   ஊழிக்
காலத்தையும்   கடந்துளதாகிய;    உருமின்   -   இடி   போன்ற
வேற்படையாலே;    சயம்   தனைப்  பொரும்   தம்பியை  -
வெற்றியையே   உவமை  கூறத்தக்க    வீடணனது;  உயிர்கொளச்
சமைந்தான்
- உயிரைக் கொள்வதற்குத் துணிந்தான். 

(26)
 

9557.

விட்ட போதினின் ஒருவனை வீட்டியே மீளும்,
பட்ட போது அவன் நான்முகன் ஆயினும் படுக்கும்.
வட்ட வேல்அது வலம்கொடு வாங்கினன், வணங்கி,
எட்ட நிற்கலாத் தம்பிமேல் வல் விசைத்து எறிந்தான்.
 

விட்ட போதினின் ஒருவனை வீட்டியே மீளும்- வேலை எறிந்த
போது   அந்த   ஒரு   பகைவனை   வீழ்த்தி    விட்டே   திரும்பும்;
பட்டபோது அவன் நான்முகன் ஆயினும் படுக்கும்- மேலே பட்ட
போது    தன்னைப்   படைத்த   பிரமனே    ஆனாலும்   கொல்லும்
தன்மையது; வட்டவேல் அது வலங்கொடு வாங்கினான் வாங்கி  -
திருத்தமான   வேலை   வலந்திரிந்து    எடுத்து    வணங்கி;  எட்ட
நிற்கலாத்    தம்பிமேல் 
 -   தொலைவில்    நிற்காத     அருகில்
உள்ள  தம்பி வீடணன்  மேல்; வல்  விசைத்து எறிந்தான்- மிகுந்த
வேகத்துடன் எறிந்தான்.
 

வட்டம் - திருத்தம். 
  

(27)
 

வீடணன், ஈது என் உயிர் அழிக்கும்' என இலக்குவன்
'போக்குவேன் அஞ்சல் நீ' எனல்
  

9558.

எறிந்த காலையில், வீடணன் அதன் நிலை எல்லாம்
அறிந்த சிந்தையன், 'ஐய! ஈது என் உயிர் அழிக்கும்;
பிறிந்து செய்யல் ஆம் பொருள் இலை' என்றலும்,

பெரியோன்,

'அறிந்து போக்குவல்; அஞ்சல், நீ!' என்று இடை

அணைந்தான்.

 

எறிந்த காலையில் - இராவணன் வேலினை  எறிந்த போது;
அதன்  நிலை எல்லாம் அறிந்த சிந்தையன்   வீடணன்  -
அவ்வேலின்   திறம்   முழுதும்  அறிந்த  அறிவுடையோனாகிய
வீடணன்; ஐய! ஈது என் உயிர் அழிக்கும்- ஐயனே! இவ்வேல்
என் உயிரை வாங்கும்; பிறிந்து செய்யல் ஆம் பொருள் இலை
என்றலும்
- தடுத்துச்