பக்கம் எண் :

 வேல் ஏற்ற படலம்213

செய்தற்குரிய   உபாயம்   வேறு   இல்லை  என்று  கூறியதும்;
பெரியோன் அறிந்து போக்குவல்  - இதைப் போக்கும் திறம்
அறிந்து   போக்குகின்றேன்;  நீ அஞ்சல் -  நீ  பயப்படாதே;
என்று  இடை அணைந்தான்  - எனக்  கூறி வீடணன் நின்ற
இடத்தில் வந்து நின்றான். 
  

(28)
 

9559.

எய்தவாளியும், ஏவின படைக்கலம் யாவும்,
செய்த மா தவத்து ஒருவனைச் சிறு தொழில்

தீயோன்

வைத வைவினில் ஒழிந்தன; 'வீடணன் மாண்டான்,
உய்தல் இல்லை' என்று, உம்பரும் பெரு மனம்

உலைந்தார்..

 

எய்த வாவியும்   - இலக்குவன் எய்த அம்புகளும்;  ஏவின
படைக்கலம் யாவும்
- ஏவிய படைக்கருவிகள் எல்லாம்; செய்த
மாதவத்து ஒருவனை
- சிறந்த  தவத்தால்  பெரியோனை;  சிறு
தொழில் தீயோன் வைத வைவினில் ஒழிந்தன
- கீழான ஏவல்
புரியும்  தீயோன்   சபித்த  சாபம்  பலிக்காது போயின  போலப்
பயனின்றிப்    போயின;  வீடணன்  மாண்டான்  -   வீடணன்
செத்தான்; உய்தல் இல்லை என்று - பிழைப்பது இனி இல்லை
என்று; உம்பரும்  பெருமனம்   உலைந்தோர்  - தேவர்களும்
தம்முடைய பெருமை மிக்க மனம் அழிந்தனர். 
  

(29)
 

இலக்குவன் வேலைத் தன் மார்பில் ஏற்க எதிர்தல்
 

9560.

'தோற்பென் என்னினும், புகழ் நிற்கும், தருமமும்

தொடரும்

ஆர்ப்பர் நல்லவர்; அடைக்கலம் புகுந்தவன்

அழியப்

பார்ப்பது என்? நெடும் பழி வந்து தொடர்வதன்

முன்னம்

ஏற்பென், என் தனி மார்பின்' என்று, இலக்குவன்

எதிர்ந்தான்.

 

தோற்பென்  என்னினும் - (வீடணனைக்   காக்க வேலை ஏற்று)
என்  உயிரை இழந்தேன்  என்றாலும்; புகழ் நிற்கும் - (அடைக்கலம்
காத்த)  புகழ்  நிலைத்து நிற்கும்; தருமமும் தொடரும்  -  அறமும்
என்னைத்  தொடர்ந்து வரும்; நல்லவர் ஆர்ப்பர்- நல்ல மனிதர்கள்