மகிழ்ச்சியால் ஆரவாரம் செய்வர்; அடைக்கலம் புகுந்தவன் அழியப் பார்ப்பது என் - அடைக்கலமாக அடைந்த வீடணன் இறக்கப் பார்த்துக் கொண்டிருப்பது எதற்கு? நெடும் பழி வந்து தொடர்வதன் முன்னம் - (அடைக்கலப் பொருளைக் காவாமல் விட்டான் என்று) நெடுங்காலம் நிற்கும் பழி வந்து தொடர்வதற்கு முன்னரே; என் தனி மார்பின் ஏற்பென்- எனது ஒப்பற்ற மார்பில் அவ்வேலை ஏற்பேன்; என்று இலக்குவன் எதிர்ந்தான் - என்று இலக்குவன் எதிர் நின்றான்; |
(30) |
வேலை ஏற்க பலரும் முந்த இறுதியில் இலக்குவன் ஏற்றல் |
9561. | இலக்குவற்கு முன் வீடணன் புகும்; இருவரையும் |
| விலக்கி, அங்கதன் மேற்செலும்; அவனையும் விலக்கி, |
| கலக்கும் வானரக் காவலன்; அனுமன் முன் கடுகும்; |
| அலக்கண் அன்னதை இன்னது என்று உரை செயல் |
| ஆமோ? |
|
இலக்குவற்கு முன் வீடணன் புகும் - இலக்குவனுக்கு முன்னர் வீடணன் செல்வான்; இருவரையும் விலக்கி அங்கதன் மேற்செலும் - அவ்விருவரையும் விலக்கி விட்டு வாலி மகன் அங்கதன் முன் புகுவான்; அவனையும் விலக்கி வானரக் காவலன் கலக்கும்- அங்கதனை விலக்கிவிட்டு வானரர் அரசாம் சுக்கிரீவன் முந்துவான்; அனுமன் முன் கடுகும் - அனுமன் விரைந்து செல்வான்; அலக்கண் அன்னதை - அப்படிப்பட்ட துன்பத்தை; இன்னது என்று உரை செயல் ஆமோ- இத்தகையது என்று கூற முடியுமா? |
(31) |
9562. | முன் நின்றார் எலாம் பின் உற, காலினும் முடுகி, |
| 'நின்மின்; யான் இது விலக்குவென்' என்று உரை |
| நேரா, |
| மின்னும் வேலினை, விண்ணவர் கண் புடைத்து |
| இரங்க, |
| பொன்னின் மார்பிடை ஏற்றனன், முதுகிடைப் போக. |
|
முன் நின்றார் எலாம் பின் உற- முன்னே சென்றவர்கள் எல்லாம் பின்னே நிற்க; காலினும் முடுகி - காற்றினும் விரைந்து சென்று; நின்மின் யான் இது விலக்குவென் - எல்லாரும் |