பக்கம் எண் :

 வேல் ஏற்ற படலம்215

நில்லுங்கள்  நான்   இதை   விலக்குவேன்;   என்று உரை நேரா
மின்னும்  வேலினை
-  என்று சொல்லிக்கொண்டே  ஒளி  வீசும்
வேலை; விண்ணவர் கண் புடைத்து இரங்க- தேவர்கள் கண்மேல்
மோதிக்     கொண்டு   வருந்த;   பொன்னி்ன்    மார்பிடை -
பொன்னிறமுள்ள  மார்பில்  பட்டு; முதுகிடைப்போக ஏற்றனன் -
முதுகுக்குள்ளே ஊடுருவிப் போக (அவ்வேலை) ஏற்றான் இலக்குவன். 
 

(32)
 

வீடணன், இராவணன் தேர்க் குதிரையையும் சாரதியையும்
அழித்தல்
 

9563.

'எங்கு நீங்குதி நீ?' என, வீடணன் எழுந்தான்,
சிங்கஏறு அன்ன சீற்றத்தான், இராவணன் தேரில்
பொங்கு பாய் பரி சாரதியொடும் படப் புடைத்தான்
சங்க வானவர் தலை எடுத்திட, நெடுந் தண்டால்.
 

எங்கு   நீங்குதி   நீ   என `வீடணன் எழுந்தான்-
(போர்க்களத்தை  விட்டுப் புறப்படும் இராவணனைப் பார்த்து)
வீடணன்,  'நீ எங்கே செல்கிறாய் என்று எழுந்து; சிங்கஏறு
அன்ன  சீற்றத்தான் 
-  ஆண்  சிங்கம் போன்ற கோபம்
உடையவனாய்; இராவணன் தேரில்- இராவணனுடைய தேரிலே;
பொங்குபாய் பரி சாரதியொடும் பட  -   கிளர்ந்து  பாயும்
குதிரையொடு  தேரோட்டியும் இறந்திட; சங்க வானவர் தலை
எடுத்திட  நெடுந்தண்டால்  புடைத்தான் 
-  திரளாயுள்ள
தேவர்கள்   மீண்டும்   கிளர்ச்சி   பெற்றுயரத்  தன்  நீண்ட
தண்டாயுதத்தால் அடித்தான். 
  

(33)
 

9564.

சேய் விசும்பினில் நிமிர்ந்து நின்று, இராவணன் சீறி,
பாய் கடுங் கணை பத்து அவன் உடல் புகப் பாய்ச்சி,
ஆயிரம் சரம் அனுமன்தன் உடலினில் அழுத்தி,
போயினன், 'செரு முடிந்தது' என்று, இலங்கை ஊர்

புகுவான்.

 

சேய்   விசும்பினில்   நிமிர்ந்து  நின்று  இராவணன்  சீறி -
தூரத்தே  உள்ள   வானில்  உயரச்   சென்று   இராவணன்   சீற்றம்
கொண்டு;  அவன் உடல்  புகப்  பாய் கடுங்கணை பத்து பாய்ச்சி
- அவ்வீடணன்   உடம்பிலே  பாய்கின்ற  கொடிய  அம்புகள்  பத்தை
அழுத்திவிட்டு; ஆயிரம் சரம் அனுமன்  தன்  உடலினில் அழுத்த
- ஆயிரம் அம்புகளை  அனுமனின்  உடம்பில்  பாய்ச்சிவிட்டு;  செரு
முடிந்தது