என்று- போர் முற்றுப் பெற்றது என்று; இலங்கை ஊர் புகுவான் போயினன் - இலங்கை நகரில் புக, (இராவணன்) சென்றான். |
(34) |
9565. | 'தேடிச் சேர்ந்த என் பொருட்டினால், உலகுடைச் |
| செல்வன் |
| வாடிப் போயினன்; நீ இனி வஞ்சனை மதியால் |
| ஓடிப் போகுவது எங்கு? அடா! உன்னொடும் உடனே |
| வீடிப் போவென்' என்று அரக்கன்மேல் வீடணன் |
| வெகுண்டான். |
|
தேடிச் சேர்ந்த என் பொருட்டினால் - அடைக்கலமாகப் புகுந்த என்னைக் காப்பதற்காக; உலகுடைச் செல்வன் வாடிப் போயினன் - உலகம் எல்லாம் தன்னதாக உடைய இலக்குவன் வாடிப் போனான்; இனி வஞ்சனை மதியால் ஓடிப் போகுவது எங்கு? - இனிமேல் உன்னுடைய வஞ்சனை புத்தியால் நீ ஓடிப் போவது எங்கு? அடா! உன்னொடும் உடனே வீடிப் போவென் என்று- அடா உன்னோடு இப்போதே போர் செய்து உன்னைக் கொன்று நானும் இறப்பேன் என்று; அரக்கன் மேல் வீடணன் வெகுண்டான் - இராவணன் மீது வீடணன் கோபித்தான். |
(35) |
வீடணனைக் கொல்லாது விடுத்து இராவணன் மீளுதல் |
9566. | 'வென்றி என் வயம் ஆனது; வீடணப் பசுவைக் |
| கொன்று இனிப் பயன் இல்லை' என்று, இராவணன் |
| கொண்டான்; |
| நின்றிலன், ஒன்றும் நோக்கிலன், முனிவு எலாம் |
| நீத்தான்; |
| பொன் திணிந்தன மதிலுடை இலங்கை ஊர் |
| புக்கான். |
|
வென்றி என் வயம் ஆனது - வெற்றி என் வசம் ஆயிற்று; வீடணப் பசுவைக் கொன்று இனிப் பயன் இல்லை என்று- பசுப் போன்ற வீடணனைக் கொன்று இனிமேல் அடையும் நன்மை ஒன்றும் இல்லை என்று; இராவணன் கொண்டான் - இராவணன் மனத்தில் நினைத்தான்; நின்றிலன் - நிற்கவும் இல்லை; ஒன்றும் நோக்கலன் - போர்க்களத்து எதையும் பார்க்கவில்லை; முனிவு எலாம் நீத்தான்- கோபம் எல்லாம் விட்டவனாய்; பொன் |