பக்கம் எண் :

 வேல் ஏற்ற படலம்217

திணிந்தன மதிலுடை இலங்கை ஊர் புக்கான்  - அழகிய மதிலை
உடைய இலங்கை நகர்க்குள் சென்றான். 
 

(36)
 

வீடணன் ஆற்றாது அரற்றுதல்
 

9567.

அரக்கன் ஏகினன்; வீடணன் வாய் திறந்து அரற்றி,
இரக்கம்தான் என இலக்குவன் இணை அடித்

தலத்தில்,

கரக்கல் ஆகலாக் காதலின் வீழ்ந்தனன் கலுழ்ந்தான்;
குரக்கு வெள்ளமும் தலைவரும் துயரிடைக்

குளித்தார்.

 

அரக்கன்  ஏகினன் - இராவணன்   இலங்கைக்குள்   சென்றான்;
வீடணன்   வாய்  திறந்து   அரற்றி  -  வீடணன்  வாய்   திறந்து
புலம்பி;   இரக்கம் தான்  என இலக்குவன்  இணை அடித்தலத்தில்
- இரக்கப்  பண்பே  உருவான  இலக்குவனின்  இரண்டு   காலடியில்;
கரக்கல்   ஆகலாக் காதலின்  -   அடக்க  முடியாத  அன்பினால்;
கலுழ்ந்தான்     வீழ்ந்தனன்  -   கண்ணீர்   சிந்தி    விழுந்தான்; 
குரக்கு    வெள்ளமும்   தலைவரும்  துயரிடைக்    குளித்தார்-
குரங்குச் சேனையும் அதன் தலைவர்களும் துன்பத்தில் ஆழ்ந்தார்கள். 
  

(37)
 

9568.

பொன் அரும்பு உறு தார்ப் புயப் பொருப்பினான்

பொன்ற

என் இருந்து நான்? இறப்பென், இக் கணத்து;

எனை ஆளும்

மன் இருந்து இனி வாழ்கிலன்' என்றனன் மறுக,
'நில், நில்' என்றனன், சாம்பவன் உரை ஒன்று

நிகழ்த்தும்.

 

பொன் அரும்பு உறுதார்ப் புயப் பொருப்பினான்  பொன்ற -
அழகு  மிக்க   அரும்பால்   கட்டிய   மாலையணிந்த  தோள்களாம்
மலையை  உடைய  இலக்குவன் இறக்க; நான் இருந்து என்? - நான்
உயிரோடு  இருந்து  என்ன பயன்?  இக்கணத்து இறப்பென்- இந்த
நொடியே இறப்பேன்; எனை ஆளும் மன் இருந்து இனி வாழ்கிலன்
என்றனன்  மறுக
- என்னை  அடைக்கலமாய்க்  கொண்ட  இராமன்
இனி    உயிரோடு    வாழான்    என்று     மனங்கலங்கி    நிற்க;
சாம்பவான் 'நில் நில்' என்றனன்- சாம்பவான் அவனைத்