தடுத்து 'நில் நில்' என்று கூறி,; உரை ஒன்று நிகழ்த்தும்- சொல் ஒன்று சொல்வான்.
|
(38) |
9569. | 'அனுமன் நிற்க, நாம் ஆர் உயிர்க்கு இரங்குவது |
| அறிவோ? |
| நினையும் அத்துணை மாத்திரத்து, உலகு எலாம் |
| நிமிர்வான், |
| வினையின் நல் மருந்து அளிக்கின்றான்; |
| உயிர்க்கின்றான், வீரன் |
| தினையும் அல்லல் உற்று அழுங்கன்மின்' என்று இடர் |
| தீர்த்தான். |
|
அனுமன் நிற்க நாம் ஆர் உயிர்க்கு இரங்குவது அறிவோ- அனுமன் நம் பக்கம் இருக்கும் போது நாம் அரிய உயிர் நீங்கியதற்கு வருந்துதல் அறிவுடைமை ஆகுமோ; நினையும் அத்துணை மாத்திரத்து உலகு எலாம் நிமிர்வான் - அனுமன் எண்ணிய அளவில் உலகெலாம் நிமிர்கின்ற பேருருவுடையவனாய்; வினையின் நல் மருந்து அளிக்கின்றான் - நம் புண்ணிய வினையால் நல்ல மருந்தைக்கொண்டு அளிக்கின்றான்; வீரன் உயிர்க்கின்றான் - அளித்தவுடன் இலக்குவன் உயிர் பெற்றெழுகின்றான்; தினையும் அல்லல் உற்று அழுங்கன்மின் என்று இடர் தீர்த்தான் - மிகச்சிறிய அளவும் துன்பமுற்று வருந்தாதீர்கள் என்று சாம்பவான் கூறி வீடணன் முதலியோர் துன்பம் தீர்த்தான். |
(39) |
அனுமன் மருந்து கொண்டு வந்து இலக்குவனை உயிர்ப்பித்தல் |
9570. | மருத்தின் காதலன் மார்பிடை அம்பு எலாம்வாங்கி, |
| 'இருத்தியோ, கடிது ஏகலை? இளவலை இங்ஙன் |
| வருத்தம் காணுமோ மன்னவன்?' என்னலும், |
| அன்னான் |
| கருத்தை உன்னி, அம் மாருதி உலகு எலாம் |
| கடந்தான். |
|
மருத்தின் காதலன் - வாயுமகனாகிய அனுமனின்; மார்பிடை அம்பு எலாம் வாங்கி - மார்பில் தைத்த அம்பு எலாம் வாங்கிவிட்டு; இருத்தியோ கடிது ஏகலை- நீ மருந்து கொண்டு வராமல் |