பக்கம் எண் :

 வேல் ஏற்ற படலம்219

இருப்பாயோ விரைந்து செல்ல மாட்டாயா; மன்னவன் இளவலை
இங்ஙனன்   வருத்தம் காணுமோ 
- இராமன் தன் தம்பியாம்
இலக்குவனை இவ்வருத்த  நிலையில் காண்பானா? என்னலும் -
என்று   சாம்பவன்  கூற;  அன்னான்  கருத்தை   உன்னி -
அத்தகையோன் எண்ணத்தை   நினைத்துப் பார்த்து; அம்மாருதி
உலகு எலாம் கடந்தான்
- அவ்வனுமான் உலகங்களை எல்லாம்
கடந்து சென்றான். 

(40)
 

அறுசீர் ஆசிரிய விருத்தம்
 

9571.

உய்த்து ஒரு திசைமேல் ஓடி உலகு எலாம் கடக்கப்

பாய்ந்து,

மெய்த் தகு மருந்துதன்னை, வெற்பொடும்

கொணர்ந்த வீரன்,

பொய்த்தல் இல் குறி கெடாமே பொது அற நோக்கி,

பொன்போல்

வைத்தது வாங்கிக் கொண்டு வருதலில், வருத்தம்

உண்டோ?

 

உய்த்து ஒரு திசை மேல் ஓடி- (தன் கருத்தை மருந்தின்
மீது)   செலுத்தி  வட திசையில் ஓடி; உலகு எலாம் கடக்கப்
பாய்ந்து
 -  உலகங்கள்  எல்லாம்    கடந்திடுமாறு  பாய்ந்து
சென்று;   மெய்த்தகு மருந்து  தன்னை -  மெய்ம்மையுடன்
பொருந்திய மருந்தை;   வெற்பொடும் கொணர்ந்த  வீரன்-
மருத்து மலையுடன் முன்னர் கொண்டு வந்த வீரனாம் அனுமான்;
பொய்த்தல்  இல்குறி   கெடாமே  பொது  அறநோக்கி -
பொய்யில்லாத அடையாளங்களை நன்கு பார்த்து; பொன் போல்
வைத்தது    வாங்கிக்   கொண்டு   வருதலில்  வருத்தம்
உண்டோ?
- பாதுகாப்பாக   வைத்த   பெருஞ்செல்வம்  போல் 
போற்றி வைத்ததை  மீண்டும்  கொண்டு  வருவதில் துன்பம்
உண்டோ? (இல்லை) 
 

(41)
 

9572.

தந்தனன், மருந்துதன்னை; தாக்குதல் முன்னே 

யோகம்

வந்தது, மாண்டார்க்கு எல்லாம், உயிர் தரும்

வலத்தது என்றால்,