கொள்ளுமாறு மார்பினைப் பிளந்து திறந்து, ஈரலை வெளிப்படுத்துவாரும்; பண்கள் புக்கு அலம்பும் நாவை - பண்கள் புகுந்து ஒலிக்கின்ற நாவை; உயிரொடு பறிக்கின்றாரும்- உயிரோடு பறிக்கின்றவர்களும் ஆகிய பெண்கள்; எண்களில் பெரிய ஆற்றார்- எண்ணில் அடங்காதவராயினர்; |
சூல்கின்றார் - தோண்டுகின்றார். தடிதல் - வெட்டுதல் ''வாளோச்சிமிகத் தடிந்தார்'' (பு.வெ. 5,8) ஈருள் - ஈரல். அலம்புதல் - ஒலித்தல், இந்திரசித்தின் இறத்தல் துன்பத்தைத் தாள முடியாதவர்களின் செயல் கூறப்பட்டது. துன்பத்தின் மிகுதி காட்டுவான் பெண்கள் மேல் வைத்துக் கூறினார். |
(41) |
| 9227. | மாதிரம் கடந்த திண் தோள் மைந்தன்தன் மகுடச் |
| சென்னி |
| போதலைப் புரிந்த யாக்கை பொறுத்தனன் புகுதக் |
| கண்டார், |
| ஓத நீர் வேலை அன்ன கண்களால் உகுத்த |
| வெள்ளக் |
| காதல் நீர் ஓடி, ஆடல் கருங் கடல் மடுத்தது அன்றே. |
| |
மாதிரம் கடந்த திண்தோள் மைந்தன் தன்- திசைகளையெல்லாம் வென்ற திண்ணிய தோள்களையுடைய மகனுடைய; மகுடச் சென்னி போதலைப் புரிந்த யாக்கை- முடியணிந்த தலை நீங்கப் பெற்ற உடலை; பொறுத்தனன் புகுதக் கண்டார்- சுமந்தவனாய் இராவணன் இலங்கைக்குள் புகக் கண்டவர்கள்; ஓதநீர் வேலை அன்ன கண்களால் - வெள்ளமான நீரைக் கொண்ட கடலைப் போன்ற பரந்த கண்களால்; உகுத்த வெள்ளக் காதல் நீர் ஓடி- சொரிந்த, அன்பினை வெளிப்படுத்தும் வெள்ளநீர் ஓடிச்சென்று; ஆடல் கருங்கடல் மடுத்தது - அலையாடுதலை யுடைய கரிய கடலைக் கலந்தது. |
அன்று, ஏ - அசைகள். |
(42) |
| 9228. | ஆவியின் இனிய காதல் அரக்கியர் முதல்வர் ஆய |
| தேவியர் குழாங்கள் சுற்றி, சிரத்தின்மேல் தளிர்க் |
| கை சேர்த்தி, |
| ஓவியம் வீழ்ந்து வீழ்ந்து புரள்வன ஒப்ப, ஒல்லைக் |
| கோ இயல் கோயில் புக்கான், குருதி நீர்க் குமிழிக் |
| கண்ணான். |