பக்கம் எண் :

 வேல் ஏற்ற படலம்221

வானரத் தலைவர் இராமன்பால் செல்ல, அவன் 'விளைந்தது என்?' எனல்
 

9574.

''தருமம்'' என்று அறிஞர் சொல்லும் தனிப்

பொருள்தன்னை இன்னே,

கருமம் என்று அனுமன் ஆக்கிக் காட்டிய தன்மை

கண்டால்,

அருமை என் இராமற்கு? அம்மா! அறம் வெல்லும்,

பாவம் தோற்கும்

இருமையும் நோக்கின்' என்னா, இராமன்பால் எழுந்து

சென்றார்.

 

தருமம் என்று அறிஞர் சொல்லும் தனிப்பொருள் தன்னை-
அறம் என அறிஞர் கூறும் ஒப்பற்ற பொருளை; இன்னே கருமம்
என்று - இப்போதே செய்யத் தக்கது என்று; அனுமன் காட்டிய
தன்மை
- அனுமன்  நிரூபித்துக்  காட்டிய  தன்மை;  கண்டால்
இராமற்கு அருமை என்
- நோக்கினால்  இராமனுக்கு  செய்தற்கு
அரிய  பொருள் எது? (ஒன்றுமில்லை);  இருமையும் நோக்கின்-
இம்மை மறுமையை ஆராயின்; அறம் வெல்லும் பாவம் தோற்கும்
- அறம்  வெல்லும்  மறம்  தோற்கும்; என்னா   இராமன்  பால்
எழுந்து சென்றார்- என்று கூறி இராமனிடத்து எழுந்து போனார். 
  

(44)
 

9575.

ஒன்று அல பல என்று ஓங்கும் உயர் பிணத்து

உம்பரோடும்

குன்றுகள் பலவும், சோரிக் குரை கடல் அனைத்தும்

தாவிச்

சென்று அடைந்து, இராமன் தன்னைத் திருவடி

வணக்கம் செய்தார்,

வென்றியின் தலைவர், கண்டஇராமன், 'என்

விளைந்தது?' என்றான்.

 

ஒன்று அல பல என்று - ஒன்று அல்லாதன பல என்று கூறுமாறு;
உயர்பிணத்து  குன்றுகள்  பலவும்  -  உயர்ந்த பிணக் குன்றுகள்
பலவற்றையும்;  சோரிக்  குரைகடல்  அனைத்தும்   -  ஒலிக்கும்
இரத்தக்   கடல்   அனைத்தும்;   உம்பரோடும்  தாவிச்  சென்று,
அடைந்து
  -  தேவர்களோடும்  கடந்து சென்று சேர்ந்து;  இராமன்
தன்னை திருவடி வணக்கம் செய்தார்
 -  இராமனின் திருவடிகளை
வணங்கினார்கள்; வென்றியின் தலைவர்- வெற்றி கண்ட