பக்கம் எண் :

222யுத்த காண்டம் 

தலைவர்கள்;  கண்ட  இராமன்  -  அவ்வாறு  வணங்கக்  கண்ட
இராமன்; விளைந்தது என் என்றான் - நடந்தது என்ன என்று கேட்டான். 

(45)
 

இராமன் அனுமனை வாழ்த்துதல்
 

9576.

உற்றது முழுதும் நோக்கி, ஒழிவு அற, உணர்வு உள்

ஊற,

சொற்றனன் சாம்பன்; வீரன் அனுமனைத் தொடரப் 

புல்லி,

'பெற்றனன் உன்னை; என்னை பெறாதன?

பெரியோய்! என்றும்

அற்று இடையூறு செல்லா ஆயுளை ஆக!' என்றான்.
 

சாம்பன் உற்றது முழுதும் நோக்கி- (அது கேட்ட) சாம்பன்
நிகழ்ந்ததை முழுவதும் சிந்தித்து; ஒழிவு அற உணர்வுள் ஊறச்
சொற்றனன்
- ஒன்று விடாமல் இராமனின்     உணர்வில் பதியும்
வண்ணம்    கூறினான்; வீரன் அனுமனைத் தொடரப்புல்லி -
வீரனாம் அனுமானை இராமன்    நெருங்கத் தழுவி; பெரியோய்!
உன்னைப்  பெற்றனன்
- பெரியோனை!     உன்னைப் பெற்று
விட்டேன்; என்னை    பெறாதன் - இனிப் பெறாத பேறு என்ன
உளது?    என்றும் அற்று இடையூறு செல்லா ஆயுளை ஆக
என்றான்
- எக்காலத்தும் இடையறவு பட்டு முடியாத நீண்ட ஆயுளை
உடையவன் ஆகுக என வாழ்த்தினான். 

(46)
 

இலக்குவன் இராமன் பாராட்டல்
 

9577.

புயல் பொழி அருவிக் கண்ணன், பொருமலன்

பொங்குகின்றான்,

உயிர் புறத்து ஒழிய நின்ற உடல் அன்ன உருவத் 

தம்பி,

துயர் தமக்கு உதவி, மீளாத் துறக்கம் பெற்று,

உயர்ந்த தொல்லைத்,

தயரதற் கண்டால் ஒத்த தம்முனைத் தொழுது 

சார்ந்தான்.