புயல் பொழி அருவிக் கண்ணன்- மேகம் போல் பொழியும் கண்ணீர் அருவியை உடைய கண்களுடையவனும்; பொருமலன் பொங்குகின்றான்- அழுது விம்முபவனும் மகிழ்ச்சி பொங்கும் மனமுடையவனும்; உயிர் புறத்து ஒழிய நின்ற உடல் அன்ன உருவத்தம்பி - உயிர் பிரிந்து வெளியே நிற்க அதைப் பிரிந்த உடம்பு போல வாடிய உருவமுடையவனும் ஆகிய தம்பி இலக்குவன்; துயர் தமக்கு உதவி - தமக்குப் பிரிவாற்றாத் துன்பம் கொடுத்து விட்டு; மீளாத் துறக்கம் பெற்று உயர்ந்த தொல்லைத் தயரதற் கண்டால் ஒத்த - இறந்து மீண்டும் வராத துறக்க உலகைப் பெற்றுயர்வுற்ற பழைய தயரதனை வரக்கண்டு மகிழ்ந்தது போன்று; தம்முனைத் தொழுது சார்ந்தான்- தன் அண்ணன் இராமனை வணங்கி வந்தடைந்தான். |
(47) |
9578. | இளவலை நோக்கி, 'ஐய! இரவிதன் குலத்துக்கு |
| ஏற்ற |
| அளவினம்; அடைந்தோர்க்கு ஆகி, மன் உயிர் |
| கொடுத்த வன்மைத் |
| துளவு இயல் தொங்கலாய்! நீ அன்னது துணிந்தாய் |
| என்றால் |
| அளவு இயல் அன்று; செய்தற்கு அடுப்பதே ஆகும் |
| அன்றே? |
|
இளவலை நோக்கி - தன்னைத் தொழுது வந்த தம்பியைப் பார்த்து; ஐய! துளவு இயல் தொங்கலாய்!- ஐயனே! துளவத்தால் கட்டிய மாலை அணிந்தவனே; இரவி தன் குலத்துக்கு ஏற்ற அளவினம் - சூரிய குல இயல்புக்குத் தக்கபடி; அடைந்தோர்க்கு ஆகி - தம்மை அடைக்கலமாக வந்தவர்க்கு உதவுவோர் ஆகி; மன் உயிர் கொடுத்த வன்மை- நிலை பெற்ற உயிர் கொடுக்கும் வலிய செயல்; அன்னது துணிந்தாய் என்றால்- நீ அச்செயல் செய்யத் துணிந்தாய் என்றால்; அளவியல் அன்று- அது நின் தகுதிக்கு மிகுதியான அளவினை உடையதன்று; அடுப்பதே ஆகும் அன்றே - செய்தற்கு ஏற்ற செயலே ஆகும் அல்லவா?
|
(48) |
9579. | புறவு ஒன்றின் பொருட்டின் யாக்கை புண் உற |
| அரிந்த புத்தேள் |
| அறவனும், ஐய! நின்னை நிகர்க்கிலன்; அப்பால் |
| நின்ற |