| வானரர் களம் காண் படலம் | 227 |
| கழுகொடு பருந்தும், பாறும், பேய்களும், கணங்கள் | | மற்றும், | | குழுவிய களத்தைக் கண்ணின் நோக்கினர், | | துணுக்கம் கொண்டார். | | தலைவர் எல்லாம் தொழுதனர் - வானரத் தலைவர்கள் எல்லாம் (இராமனைத்) தொழுதனர்; தோன்றிய காதல் தூண்ட - உண்டான ஆசை தூண்டுவதால்; இராவணற்கு இளவலோடும் - இராவணன் தம்பியாம் வீடணனோடும்; 'எழுக' என விரைவின் சென்றார்- 'எழுக' என்று கூறி விரைவாகச் சென்றனர்; கழுகொடு, பருந்தும் பாறும் பேய்களும் கணங்கள் மற்றும் குழுவிய களத்தை - கழுகும், பருந்தும், பாறும் பேய்களும் மற்றுமுள்ள காகம் முதலிய கூட்டமும் கூடியுள்ள போர்க்களத்தை; கண்ணின் நோக்கினர் - கண்ணில் கண்டனர்; துணுக்கம் கொண்டார் - மனநடுக்கம் கொண்டனர். | (3) | 9584. | ஏங்கினார்; நடுக்கமுற்றார்; இரைத்து இரைத்து, | | உள்ளம் ஏற, | | வீங்கினார்; வெருவலுற்றார்; விம்மினார்; உள்ளம் | | வெம்ப, | | ஓங்கினார்; மெள்ள மெள்ள உயிர் நிலைத்து, | | உவகை ஊற, | | ஆங்கு அவர் உற்ற தன்மை யார் அறிந்து | | அறையகிற்பார்? | | ஏங்கினார் - அழுதார்கள்; நடுக்கமுற்றார் - நடுக்கம் அடைந்தார்கள்; இரைத்து இரைத்து உள்ளம் ஏற வீங்கினார்- பெருமூச்சு வாங்கி மனம் துன்புற உடம்பு வீங்கினார்கள்; வெருவலுற்றார் - அஞ்சினார்கள்; உள்ளம் வெம்ப விம்மினார் - மனம் வெதும்பத் தேம்பினார்கள்; மெள்ள மெள்ள உயிர் நிலைத்து - மெதுவாக உயிர்ப்பு நிலைபெற்று; உவளக ஊற - மகிழ்ச்சி பொங்க; ஓங்கினார் - உணர்வு மிகுந்தார்கள்; ஆங்கு அவர் உற்ற தன்மை - அப்போது அவர்கள் அடைந்த மெய்ப்பாட்டுத் தன்மையை; அறிந்து அறைய கிற்பார் யார் - தெரிந்து சொல்ல வல்லவர்கள் யார்? (ஒருவருமில்லை); | (4) |
|
|
|