போர்க்களக் காட்சியை வீடணன் காட்டிக் கூறுதல் |
9585. | ஆயிரம் பருவம் கண்டால், காட்சிக்கு ஓர் கரையிற்று |
| அன்றால்; |
| மேயின துறைகள்தோறும் விம்மினார் நிற்பது |
| அல்லால், |
| பாய் திரைப் பரவை ஏழும் காண்குறும் பதகர் என்ன, |
| 'நீ இருந்து உரைத்தி' என்றார்; வீடணன் நெறியின் |
| சொல்வான்; |
|
பாய் திரைப்பரவை ஏழும்- அலைகள் பாய்ந்து வரும் கடல்கள் ஏழையும்; காண்குறும் பதகர் என்ன- காண விரும்பும் பாவிகளைப் போல; மேயின துறைகள் தோறும்- விரும்பிய துறைகள் தோறும்; விம்மினார் - மகிழ்ந்து; நிற்பது அல்லால் - நிற்பதன்றி; ஆயிரம் பருவம் கண்டால் காட்சிக்கு ஓர் கரையிற்று அன்றால் - ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் சாட்சிக்கு ஒரு கரை காணல் இயலாது; நீ இருந்தி உரைத்தி என்றார் - அமைதியாக இருந்து நீ சொல்க என்றனர்; வீடணன் நெறியின் சொல்வான் - வீடணன் முறையாகக் கூறுவான்.
|
(5) |
சந்தக் கலித்துறை |
9586. | 'காகப் பந்தர்ச் செங் களம் எங்கும், செறி கால |
| ஓகத்து அம்பின் பொன்றினவேனும், உடல் ஒன்றி, |
| மேகச் சங்கம் தொக்கன, வீழும் வெளி இன்றி, |
| நாகக் குன்றின் நின்றன காண்மின் - நமரங்காள்! |
|
நமரங்காள்- நம்மவர்களே!; ஓகத்து அம்பின் பொன்றினவேனும்- (இராமனின்) அம்புக் கூட்டத்தால் இறந்தன ஆயினும்; உடல் ஒன்றி - உடல்கள் ஒன்றுடன் ஒன்று ஒட்டி; செறி கால - இரத்தச் சேற்றில் சிக்கிய கால்களுடன்; மேகச் சங்கம் தொக்கன - மேகக் கூட்டம் கூடியது போல்; வீழும் வெளி இன்றி - தரையில் வீழ இடமின்றி; காகப் பந்தர் செங்களம் எங்கும்- காகங்களிட்ட பந்தரை உடைய சிவந்த போர்க்களம் எங்கும்; நாகக் குன்றின் நின்றன காண்மின்- யானை மலைகள் நின்றுள்ள நிலையைப் பாரீர். |
ஓகம் - பெருங்கூட்டம்; சங்கம் - கூட்டம்; நாகம் - யானை |
(6) |