பக்கம் எண் :

 வானரர் களம் காண் படலம்229

9587.

'வென்றிச் செங் கண் வெம்மை அரக்கர் விசை

ஊர்வ,

ஒன்றிற்கு ஒன்று உற்று அம்பு தலைப்பட்டு உயிர்

நுங்க,

பொன்றி, சிங்கம் நாக அடுக்கல் பொலிகின்ற
குன்றில் துஞ்சும் தன்மை நிகர்க்கும் குறி காணீர்.
 

வென்றிச்   செங்கண்   வெம்மை   அரக்கர்- வெற்றி
கொண்டு முன்னர் விளங்கிய சிவந்த கண்ணும் கொடுமையுமுடைய
அரக்கர்; விசை   ஊர்வ- (இராமனின்  அம்புகள்)  வேகமாக
வந்துதைக்க; அம்பு ஒன்றிற்கு  ஒன்று உற்று தலைப்பட்டு -
அம்புகள் ஒன்றின்  மேல் ஒன்று முற்பட வந்து  பாய்ந்து; உயிர்
நுங்க
- தம் உயிரைப் பருகியதால்; பொன்றி - இறந்து; சிங்கம்
நாக அடுக்கல்  பொலிகின்ற  குன்றில் துஞ்சும் தன்மை
-
சிங்கங்கள்  யானைகளாம் குன்றின் மேல்  உறங்கும் தன்மையை;
நிகர்க்கும் குறி காணீர் - ஒத்து நிற்கும் குறிப்பைப் பாரீர். 
 

(7)
 

9588.

'அளியின் பொங்கும் அங்கணன் ஏவும் அயில்

வாளிக்

களியில் பட்டார் வாள் முகம், மின்னும் கரை 

இல்லாப்

புளினத் திட்டின் கண் அகன் வாரிக் கடல் பூத்த
நளினக் காடே ஒப்பன காண்மின் - நமரங்காள்!
 

அளியின் பொங்கும் அங்கணன்- அருள் ததும்பும் அழகிய
கண்களையுடைய   இராமன்; ஏவும் அயில்வாளிக்  களியின்
பட்டார்
- ஏவிய   கூரிய   அம்புகளால் (இறக்க   வாய்ப்புப்
பெற்ற)    களிப்போடு    மடிந்த   அரக்கரின்;   மின்னும்
கரையில்லா  வாள்முகம்
- மின்னுகின்ற  அளவில்லா ஒளி
படைத்த முகங்கள்; புளினத் திட்டின் கண்  அகன் வாரிக்
கடல்  பூத்த
- மணல்  திட்டுக்களின்  அகன்ற நீர் மிகுந்த
கடலில் மலர்ந்த; நளினக்காடே ஒப்பன- தாமரைக் காடே
போல் வன; நமரங்காள்! காண்மின்- நம்மவர்களே! பாருங்கள். 
 

(8)
 

9589.

'ஒழுகிப் பாயும் மும் மத வேழம் உயிரோடும்
எழுகிற்கில்லாச் செம்புனல் வெள்ளத்திடை இற்ற;