ஆவியின் இனிய காதல்- இந்திரசித்தின் உயிரினும் இனிய காதலை உடைய; அரக்கியர் முதல்வர் ஆய - அரக்கியர் முதலோராகிய; தேவியர் குழாங்கள் சுற்றி - அவன் மனைவியர் கூட்டங்கள் சூழ்ந்துகொண்டு; சிரத்தின் மேல் தளிர்க்கை சேர்த்தி- தத்தம் சிரங்களின் மேல் தளிர்போன்ற கரங்களைச் சேர்த்துக் குவித்துக்கொண்டு; ஓவியம் வீழ்ந்து வீழ்ந்து புரள்வன ஒப்ப- சித்திரப் பதுமைகள் தரையில் வீழ்ந்து புரள்வன போலப் புரளா நிற்க; குருதிநீர்க் குமிழிக் கண்ணான் - இரத்தம் நீர்க்குமிழிகளைப் போலக் கொப்பளித்துக் கொண்டிருக்கும் கண்களை உடைய இராவணன்; ஒல்லைக்கோ இயல் கோயில் புக்கான் - விரைவாக அரசியற்குரிய அரண்மனையில் புகுந்தான். |
முன்பு இராவணன் கூறியவாறு (பாடல் 38) இந்திரசித்தின் மனைவியர் பலவகையினராதலின் ''அரக்கியர் முதல்வராய தேவியர்'' என்றார். இராவணன் கூறி அரற்றியவாறு போலவே, அவன் தன் மைந்தன் உடலோடு இலங்கைக்குள் புகுந்தவுடனே இந்திரசித்தின் தேவிமார் வந்து அரற்றி வீழ்ந்தனராக. அவர்தம் அழகிய தோற்றம் புலப்பட, 'ஓவியம் புரள்வன ஒப்ப' எனக் கூறினார். |
(43) |
மண்டோதரி மைந்தன் மேல் வீழ்ந்து, புலம்புதல் |
| 9229. | கருங் குழல் கற்றைப் பாரம் கால் தொட, கமலப் |
| பூவால் |
| குரும்பையைப் புடைக்கின்றாள்போல் கைகளால் |
| முலைமேல் கொட்டி, |
| அருங் கலச் சும்மை தாங்க, 'அகல் அல்குல் அன்றி, |
| சற்றே |
| மருங்குலும் உண்டு உண்டு' என்ன, - மயன் மகள் - |
| மறுகி வந்தாள். |
| |
மயன் மகள் - மயனுடைய மகளாகிய மண்டோதரி; பாரம் கருங்குழல் கற்றை கால் தொட- பாரமுள்ள கரிய கூந்தல் கற்றை (அவிழ்ந்து) கால்களைத் தொடா நிற்க; கமலப் பூவால் குரும்பையைப் புடைக்கின்றாள் போல் - தாமரைப் பூவினால் (தென்னங்) குரும்பையை அடிப்பவளைப் போல; கைகளால் முலைமேல் கொட்டி- கைகளால் முலைகள் மேல் அடித்துக் கொண்டு; 'அருங்கலச் சும்மை தாங்க - அரிய அணிகலன்களாகிய சுமையைத் தாங்குவதற்கு; அகல் அங்குல் அன்றி, சற்றே மருங்குலும் |