பக்கம் எண் :

230யுத்த காண்டம் 

பழகிற்கில்லாப் பல் திரை தூங்கும் படர் வேலை
முழுகித் தோன்றும் மீன் அரசு ஒக்கும் முறை

நோக்கீர்!

 

ஒழுகிப் பாயும் மும்மதவேழம்  - தரையில் ஒழுகிப் பாயும்
கன்னம்,    கபோலம்,  பீசம்    என்னும்  உறுப்புகளில்   மதநீர்
கொண்ட     யானைகள்;   உயிரோடும்     எழுகிற்கில்லா -
உயிரோடிருந்தும் எழமுடியாத; செம்புனல் வெள்ளத்திடை இற்ற
-   இரத்த  வெள்ளத்தில்   தனித்தனி  ஆயின; பழகிற்கில்லா-
பழகுதல்   இல்லாத; பல்திரை தூங்கும்- பல அலைகள் மடங்கி;
படர்வேலை   -  பரவுகின்ற  கடலில்;   முழுகித் தோன்றும்-
மூழ்கி   வெளிப்படும்;  மீன்  அரசு  ஒக்கும்  -  மீன்  அரசு
போலிருக்கும்; முறை நோக்கீர் - முறையைப் பாருங்கள். 
 

(9)
 

9590.

'பூ வாய் வாளிச் செல் எறி காலைப் பரி பொன்ற,
கோ ஆர் விண்வாய் வெண் கொடி திண் பாயொடு

கூட,

மா வாய் திண் தேர் மண்டுதலால், நீர் மறி வேலை
நாவாய் மானச் செல்வன காண்மின் - நமரங்காள்!
 

நமரங்காள் !  - நம்மவர்களே!;  பூவாய்  வாளிச்  செல்
எறிகாலை
  -   கூரிய முனையை உடைய அம்புகளாம் இடிகள்
வீழ்ந்து எறிந்த காலத்து; பரிபொன்ற- குதிரைகள் இறக்க; கோ
ஆர் விண்வாய்
- சிறப்புமிக்க வானத்திடையே; வெண்கொடி
திண்பாயொடு கூட 
- வெள்ளைக் கொடி திண்ணிய பாயொடு
பொருந்த;  மாவாய்  திண்தேர்  மண்டுதலால் -  குதிரைகள்
பூட்டிய    வலிய  தேர்கள்  இரத்த  வெள்ளத்தில்   நிற்பதால்;
நீர்மறி  வேலை  நாவாய்மானச் செல்வன  - நீர்  நிறைந்த
கடலிலே மரக்கலங்கள் போலச்  செல்வனவற்றை; காண்மின் -
பாருங்கள். 
 

(10)
 

9591.

'கடக் கார் என்னப் பொங்கு கவந்தத்தொடு கைகள்
தொடக்காநிற்கும் பேய், இலயத்தின் தொழில் பண்ணி,
மடக்கோ இல்லா வார் படிமக் கூத்து அமைவிப்பான்,
நடக் கால் காட்டும் கண்ணுளர் ஒக்கும் - நமரங்காள்!
 

நமரங்காள் ! - நம்மவர்களே!; கடக் கார் என்ன - உடல்
மேகங்களொடு ஒத்திருக்க; பொங்கு கவந்தத் தொடுகைகள் -