பக்கம் எண் :

 வானரர் களம் காண் படலம்231

எழுச்சியுற்ற  கவந்தத்திற்கு   ஏற்பக்  கைகளை; தொடக்கா
நிற்கும் பேய்
- சேர்க்கா நிற்கின்ற பேய்கள்;  இலயத்தின்
தொழில் பண்ணி
- தாளஒற்றுக்கு ஏற்ப  செயலைச் செய்து;
மடக்கோ  இல்லா வார் படிமக் கூத்து - சோம்பலில்லாத
நீண்ட  அபிநயக்  கூத்தை;  அமைவிப்பான் -  பொருந்தச்
செய்யுமாறு; நடக்கால் காட்டும்- நடனக் காலைக் காட்டுகின்ற;
கண்ணுளர் ஒக்கும் - பரத ஆசிரியனைப் போலும்.
 

கண்ணுளர் - கூத்தர்
 

'கவந்த மாடமுன்பு தங் களிப்பொ டாடு பேயினம் 

நிவந்த ஆடலாட்டுவிக்கும் நிமித்த காரர் போலுமே'
  

என்ற கலிங்கத்துப்  பரணிப்பாடலை (4.32) ஒப்பிட்டுக் காணலாம்.
பேய் கூத்தாசிரியனுக்கும் கவந்தம் கூத்துப் பயில்வோனுக்கும்
உவமை. 
  

(11)
 

9592.

'மழுவின் கூர் வாய் வன் பல் இடுக்கின் வய வீரர்
குழுவின் கொண்டந் நாடி தொடக்கப் பொறி கூட்டித்
தழுவிக் கொள்ள, கள்ள மனப் பேய் அவைதம்மை
நழுவிச் செல்லும் இயல்பின காண்மின் - நமரங்காள்!
 

நமரங்காள்- நம்மவர்களே!;  மழுவின் கூர்வாய் வன்பல்
இடுக்கின்
- மழுவினுடைய கூரிய வாய் போன்ற வலிய பல்லின்
இடுக்கிலே நடனமிடும்  பேயின் கால்கள்; வயவீரர் குழுவின்
கொண்டு 
-  வெற்றிவீரர்  கூட்டமாகக்  கொண்ட; அந்நாடி
தொடக்கப் பொறி கூட்டி
- அந்த நரம்புகள் தொடக்குதலை
உடைய யந்திரம் போல; தழுவிக் கொள்ள - கட்டிக் கொள்ள;
கள்ளமனப் பேய்- வஞ்சக உள்ளமுடைய பேய்கள்; அவை
தம்மை நழுவிச் செல்லும் இயல்பின
- அவற்றைத் தள்ளி
நழுவிப் போகின்ற தன்மையுடையதை; காண்மின் - பாருங்கள். 
 

(12)
 

9593.

'பொன்னி்ன் ஓடை மின் பிறழ் நெற்றிப் புகர் வேழம்,
பின்னும் முன்னும் மாறின வீழ்வின் பிணையுற்ற,
தன்னின் நேரா மெய் இரு பாலும் தலை பெற்ற
என்னும் தன்மைக்கு ஏய்வன பல் வேறு இவை காணீர்.
 

பொன்னின் ஓடை- பொன்னாலாகிய நெற்றிப் பட்டத்தால்;
மின்பிறழ் நெற்றிப்புகர் வேழம்- ஒளிவிளங்கும் நெற்றியில்