பக்கம் எண் :

232யுத்த காண்டம் 

செம்புள்ளிகள்   கொண்ட  யானைகள்; பின்னும் முன்னும் மாறின
வீழ்வின்   பிணையுற்ற
- அம்புகளால் வீழும் போது  பின்புறமும்
முன்புறமுமாக  மாறினவாகச்   சேர்ந்துள்ளவை;  தன்னின் நேரா -
தன்னில்தான்  ஒப்பாக; மெய் இருபாலும் தலைபெற்ற - உடம்பின்
இருபக்கமும் தலையைப் பெற்ற புதியவிலங்கு; என்னும் தன்மைக்கு
ஏய்வன
- என்று   கூறும்  பண்பிற்குப்   பொருந்துவன; பல்வேறு
இவை காணீர்
- பலவேறான இவற்றைப் பாரீர். 
 

(13)
 

9594.

'நாமத் திண் போர் முற்றிய கோப நகை நாறும்,
பாமத் தொல் நீர் அன்ன நிறத்தோர் பகு வாய்கள்,
தூமத்தோடும் வெங் கனல் இன்னும் சுடர்கின்ற
ஓமக் குண்டம் ஒப்பன பல் வேறு இவை காணீர்.
 

நாமத்திண்போர்   முற்றிய  - அச்சமூட்டும் வலிய போரில்
முதிர்ந்த;  கோப  நகை  நாறும்   -  சினக்   கடும்   சிரிப்பில்
தோன்றியவும்;    பாமத்  தொல்  நீர்   அன்ன  -  பரவுகின்ற
பழமையான  நீரையுடைய  கடல்போல்; நிறத்தோர் பகுவாய்கள்-
நிறத்தையுடையவுமான    ஒப்பில்லாத    பிளவுபட்ட    வாய்கள்;
தூமத்தொடு   வெங்கனல்  இன்னும் சுடர்கின்ற - புகையுடன்
கொடிய   நெருப்பு இன்னும்  எரிகின்ற; ஓமக்குண்டம் ஒப்பன -
ஓமகுண்டங்களைப்  போன்றன;     பல்வேறு  இவை  காணீர்-
பலவேறுபட்ட இவற்றைப் பாருங்கள். 
 

(14)
 

9595.

'மின்னும் ஓடை ஆடல் வயப் போர் மிடல் வேழக்
கன்னம் மூலத்து உற்றன வெண் சாமரை காணீர்;
மன்னும் மா நீர்த் தாமரை மானும் வதனத்த
அன்னம் மெல்லத் துஞ்சுவ ஒக்கின்றவை காணீர்.
 

மின்னும்  ஓடை  ஆடல்- மின்னுகின்ற நெற்றிப்பட்டத்தையும்
ஆடலையும்   உடைய;   வயப்போர்   மிடல்   வேழக்கன்னம்
மூலத்துற்றன 
-  வெற்றி  பொருந்திய  போரிலே  வலிமை  மிக்க
யானைகளின் காதின் அடிப்பக்கத்திலே அமைந்துள்ள; வெண்சாமரை
காணீர்
  -   வெண்சாமரைகளைப்    பாரீர்;  மன்னும்  மாநீர்த்
தாமரைமானும்
- நிலைபெற்ற மிகுந்த நீரில் உள்ள  தாமரை மலரை
ஒத்த;   வதனத்த  -  (வீரரின்) முகத்தின்மீது   படிந்த  அவைகள்;
அன்னம் மெல்லத் துஞ்சுவ ஒக்கின்றவை காணீர்