அன்னப்பறவைகள் அம்மலர்களில் மெல்லத் தூங்குகின்றவை ஒக்கும். அவற்றைப் பாரீர். |
(15) |
9596. | 'ஓளிம் முற்றாது உற்று உயர் வேழத்து ஒளிர் வெண் |
| கோடு, |
| ஆளின் முற்றாச் செம் புனல் வெள்ளத்தவை காணீர்; |
| கோளின் முற்றாச் செக்கருள் மேகக் குழுவின்கண் |
| நாளின் முற்றா வெண் பிறை போலும் - நமரங்காள்! |
|
நமரங்காள்- நம்மவர்களே!; ஆளின் முற்றாச் செம்புனல் வெள்ளத்து - வீரர்களால் நிரம்பப் பெறாத இரத்த வெள்ளத்தில்; ஓளிம் முற்றாது உற்று உயர் வேழத்து - ஒழுங்காக முற்றுகை செய்யாது போர்க்களத்தை அடைந்த உயர்ந்த யானைகளின்; ஒளிர் வெண் கோடு காணீர்- ஒளிவீசுகின்ற வெண்மையான கொம்புகளைக் காணுங்கள்!; கோளின் முற்றாச் செக்கருள் - ஒளியில் நிரம்பாச் செக்கர் வானத்துள் கிடக்கும்; மேகக்குழுவின் கண்- மேகக் கூட்டங்களினிடத்தே; நாளின் முற்றாவெண்பிறை போலும்- நாளால் நிரம்பாத வெள்ளிய பிறைமதி போல விளங்கும்; |
(16) |
9597. | 'கொடியும் வில்லும், கோலொடு வேலும், குவி தேரும், |
| துடியின் பாதக் குன்றின்மிசைத் தோல் விசியின் |
| கட்டு |
| ஒடியும் வெய்யோர் கண் எரி செல்ல, உடன் வெந்த |
| தடி உண்டு ஆடிக் கூளி தடிக்கின்றன காணீர். |
|
ஒடியும் வெய்யோர் கண் எரிசெல்ல- இறக்கும் வீரர்களின் கண்களில் தோன்றும் கோபத் தீ செல்ல; கொடியும் வில்லும் கோலொடு வேலும் குவி தேரும் - கொடிகளையும் விற்களையும் அம்புகளோடு வேல்களையும் குவிந்த தேர்களையும்; துடியின் பாதக் குன்றின்மிசை- உடுக்கைபோன்ற அடிகளையுடைய மலைபோன்ற யானைகளின் மேல்; விசியின் கட்டு - வாரினால் விரிந்து கட்டிய அம்பாரிகளையும் சுட்டிக்காட்ட; உடன்வெந்த தடியுண்டு - அவற்றுடன் வெந்த தசையைத் தின்று; ஆடிக்கூளி தடிக்கின்றன - ஆடிக் கொண்டு பேய்கள் பருக்கின்றன; காணீர்- பாருங்கள். |
(17) |