பக்கம் எண் :

24யுத்த காண்டம் 

உண்டு உண்டு' என்ன, மறுகி வந்தாள்- அகன்ற அல்குல்
மட்டும் அல்லாது, சிறிது இடையும் உண்டு' எனக் கண்டோர்
வியந்து கூறுமாறு (ஒல்கி நடந்து) மனம் கலங்கி வந்துற்றாள்.
 

துன்பம் மிகுந்ததால் தலைவிரி கோலத்துடன் மண்டோதரி
வந்தனள் என்பதாம். உத்தமப் பெண்ணாகையால் காலளவு நீண்ட
கற்றைக் கூந்தலையுடையவள் என்றார். 
 

(44)
 

9230.

தலையின்மேல் சுமந்த கையள், தழலின்மேல் 

மிதிக்கின்றாள்போல்

நிலையின்மேல் மிதிக்கும் தாளன், நேசத்தால் 

நிறைந்த நெஞ்சள்,

கொலையின் மேல் குறித்த வேடன் கூர்ங் கணை 

உயிரைக் கொள்ள,

மலையின்மேல் மயில் வீழ்ந்தென்ன, மைந்தன்மேல் 

மறுகி வீழ்ந்தாள்.

 

தலையின் மேல் சுமந்த கையள் - மண்டோதரி தலையின் 
மேல்     வைத்த   கையை   உடையவளாய்;   தழலின் மேல் 
மிதிக்கின்றாள் போல்
- நெருப்பின்  மேல் மிதிக்கின்றவளைப் 
போல; நிலையின் மேல் மிதிக்கும் தாளள் - நிலையாக உள்ள
தரையின்   மேல்   மிதிக்கின்ற   (பதைபதைக்கும்)  பாதங்களை
உடையவளாய்; நேசத்தால்  நிறைந்த நெஞ்சள் - மகன் மேல்
வைத்த பேரன்பினால்  துக்கத்தால்  நிறைந்த நெஞ்சுடையவளாய்
வந்து;  கொலையின் மேல் குறித்த  வேடன்- கொலைமேல்
சென்ற   குறிப்புடைய  வேட்டுவனது;   கூர்ங்கணை உயிரைக் 
கொள்ள
- கூரிய அம்பு தன் உயிரை வாங்க, மயில் மலையின் 
மேல்   வீழ்ந்தென்ன
   -   ஒரு   மயில்   மலையின் மேல் 
வீழ்ந்தாற்போல;  மைந்தன் மேல் மறுகி வீழ்ந்தாள் - மகனது 
உடம்பின் மேல் சுழன்று வீழ்ந்தாள். 
 

(45)
 

9231. 

உயிர்த்திலள்; உணர்வும் இல்லள்; 'உயிர் 

இலள்கொல்லோ!' என்னப்

பெயர்த்திலள், யாக்கை; ஒன்றும் பேசலள்; விம்மி 

யாதும்

வியர்த்திலள்; நெடிது போது விம்மலள்; மெல்ல  

மெல்ல,

அயர்த்தனள் அரிதின் தேறி, வாய் திறந்து, 

அரற்றலுற்றாள்;