குமுதம் நானும் மதத்தன - குமுத மலர்களின் மணம் வீசுகின்ற மத நீரை உடையனவும்; கூற்றன - எமன் போலக் கொடுமையுடையனவும்; சமுதரோடு மடிந்தன - பாகரோடு மடிந்து கிடப்பனவும்; சார் தரும் திமிரமா அன்ன செய்கைய - முன் சார்கின்ற கரும்பன்றி போலும் செய்கை கொண்டனவும் ஆகிய யானைகள்; இத்திறம் அமிர்தின் வந்தன - முன்னர் பாற்கடலில் அமுதத்தோடு பிறந்தன;ஐயிரு கோடி - பத்துக்கோடி எனும் அளவுடையன. |
(28) |
9609. | 'ஏறு நான்முகன் வேள்வி எழுந்தன; |
| ஊறும் மாரியும், ஓங்கு அலை ஓதமும், |
| மாறும் ஆயினும், மா மதமாய் வரும் |
| ஆறு மாறில, ஆறு-இரு கோடியால். |
|
ஊறும் மாரியும்- பெய்யும் மழையும்; ஓங்கு அலை ஓதமும்- உயர்ந்த அலைவீசும் கடலும்; மாறும் ஆயினும் - நீர் வற்றி வறண்டு போனாலும்; மாமதமாய் வரும் - கரிய மத நீராய் ஒழுகின்ற; ஆறு மாறில - ஆறுகள் மாற்றமுறாதனவான யானைகள்; ஆறு இரு கோடி- பன்னிரண்டு கோடி; ஏறுநான்முகன் வேள்வி எழுந்தன- பெருமையில் உயர்ந்த பிரமனின் யாகத்தின் தோன்றினவாம். |
(29) |
9610. | 'உயிர் வறந்தும், உதிரம் வறந்து தம் |
| மயர் வறந்தும், மதம் மறவாதன, |
| புயலவன் திசைப் போர் மத யானையின் |
| இயல் பரம்பரை ஏழ் - இரு கோடியால். |
|
உயிர் வறந்தும்- உயிர் நீங்கியும்; உதிரம் வறந்தும் - இரத்தம் வற்றியும்; தம்மயர் வறந்தும் - தம்முடைய மதமயக்கம் நீங்கினும்; மதம் மறவாதன - மதம் மட்டும் நீங்காதன யானைகள்; புயல்வன்- மேகங்களின் தலைவனாம் இந்திரன்; திசைப் போர் மதயானையின் - கிழக்குத் திக்கில் போர்த்திறமிக்க ஐராவத யானையின்; இயல் பரம்பரை - இயல்புள்ள மரபில் தோன்றியவை; ஏழ் இருகோடி- பதினான்கு கோடி அளவுடையன. |
9611. | 'கொடாது நிற்றலின், கொற்ற நெடுந் திசை |
| எடாது நிற்பன, நாட்டம் இமைப்பு இல, |
| வடாது திக்கின் மதவரையின் வழிக் |
| கடாம் முகத்த, முளரிக் கணக்கவால். |