வடாது திக்கின் - வடதிசைக்குரிய; மதவரையின் வழி - மதம் பொழியும் குன்றம் போன்ற சாருவ பௌமம் என்ற யானை மரபில் தோன்றி; கடாம் முகத்த - மதநீர் பொழியும் முகமுள்ள இந்த யானைகள்; கொடாது நிற்றலின் - (பிரமன் இப்பூமியைத் தாங்குக என) அருளாது இருத்தலால்; கொற்ற நெடுந்திசை - வெற்றியுடைய நீண்ட திக்கினை; எடாது நிற்பன - தாங்காமல் நிற்பன;நாட்டம் இமைப்பு இல- தேவர்போல் கண் இமையாதன; முளரிக் கணக்க- பதுமம் எனும் பெருந்தொகையன. |
(31) |
9612. | 'வானவர்க்கு இறைவன் திறை தந்தன |
| ஆன வர்க்கம் ஒர் ஆயிர கோடியும், |
| தானவர்க்கு இறைவன் திறை தந்தன |
| ஏனை வர்க்கம் கணக்கு இல, இவ் எலாம். |
|
வானவர்க்கு இறைவன் திறைதந்தன - இந்திரனால் (இராவணனுக்கு) கப்பப்பொருள்களாகத் தந்தன; ஆன வர்க்கம் ஓர் ஆயிரகோடி - ஆகிய கூட்டம் ஓர் ஆயிரகோடியாகும்; தானவர்க்கு இறைவன் - தானவர்க்குத் தலைவன்; திறை தந்தன - கப்பமாக அளித்தவை; ஏனை வர்க்கம் - மற்றோர் இனமாம்; இவ்எலாம் கணக்கு இல- இவற்றிற்குக் கணக்கு இல்லை. |
(32) |
9613. | 'பாற்கடல் பண்டு அமிழ்தம் பயந்த நாள், |
| ஆர்த்து எழுந்தன, ஆயிரம் ஆயிரம் |
| மால் கணப் பரி இங்கு இவை; மாறு இவை; |
| மேற்கின் வேலை வருணனை வென்றவால். |
|
இங்கு இவை- இங்கே காணப்படும் இக்குதிரைகள்; பண்டு பாற்கடல் அமிழ்தம் பயந்த நாள்- முன்னர்ப் பாற்கடல் அமுதத்தை அளித்த நாள்; ஆர்த்து எழுந்தன - ஆரவாரம் செய்து எழுந்தன; ஆயிரம் ஆயிரம் - ஆயிரம் ஆயிரம் கணக்குடையன; மால்கணம் பரி - பெருமைமிக்க போர்க்களக் குதிரைகள்; மாறு இவை - இவற்றிற்கு மாறாகத் தோன்றும் இவை; மேற்கின் வேலை வருணனை வென்றன - மேற்கேயுள்ள கடலில் தெய்வமாக உள்ள வருணனைவென்றவை. |
(33) |
9614. | 'இரு நிதிக் கிழவன் இழந்து ஏகின |
| அரிய அப் பரி ஆயிரம் ஆயிரம்; |