| பானம் ஊட்டி, சயனம் பரப்புவான், |
| வான நாடியர் யாவரும் வந்தனர். |
|
நானம் நெய் நன்கு உரைத்து- புழுகு நெய்யை நன்கு தேய்த்து; நறும்புனல் ஆன கோது அற ஆட்டி - நறுமண நீரால் அழுக்குப் போக நீராட்டி; அமுதொடும் பானம் ஊட்டி - அமுதாகிய சோறொடு பருகும் நீரையும் அளித்து; சயனம் பரப்புவான்- படுக்கைகளைப் பரப்புவதற்காக; வானநாடியர் யாவரும் வந்தனர் - வானுலகப் பெண்கள் அனைவரும் வந்து சேர்ந்தனர். |
(4) |
9621. | பாடுவார்கள்; பயில் நடம் பாவகத்து |
| ஆடுவார்கள்; அமளியில் இன்புறக் |
| கூடுவார்கள்; முதலும் குறைவு அறத் |
| தேடினான் என, பண்ணையின் சேர்ந்ததால். |
|
பாடுவார்கள் - இன்னிசை பாடுவார்களும்; பயில் நடம் பாவகத்து ஆடுவார்கள் - பயின்ற நாட்டியத்தை பாவனையோடு ஆடுவார்களும்; அமளியில் இன்புறக் கூடுவார்கள் - படுக்கையில் இன்பம் பொருந்த அணைவார்கள்; முதலும் குறைவு அற - முதற்பொருள் முதல் எவையும் குறைவின்றி; தேடினான் என - தேடிக் கொண்டவன் போன்று; பண்ணையின் சேர்ந்தது - மகளிர் கூட்டத்தால் சேர்ந்தது ஆம். |
தாம் புனைந்த நாடக மாந்தவராகவே ஆதி நடிப்பது பாவகம் ஆகும். பாடல், ஆடல், கூடல் என்பவற்றைத் தாமாக முயற்சி செய்யாமல் அரக்க வீரர்கள் இராவணன் ஆணையில் எளிதாகப் பெற்றனர் என்பதாம். பண்ணை - மகளிர் கூட்டம். |
(5) |
9622. | அரைசர் ஆதி, அடியவர் அந்தமா, |
| வரை செய் மேனி இராக்கதர் வந்துளார், |
| விரைவின் இந்திர போகம் விழைதர, |
| கரை இலாத பெரு வளம் கண்ணினார். |
|
அரைசர் ஆதி - அரசர் முதல்; அடியவர் அந்தமா - அடியவர்கள் ஈறாக; வரைசெய் மேனி இராக்கதர் வந்துளார்- மலை போன்ற வலிய உடம்புள்ள அரக்கர் வீரர் வந்துள்ளனர்; விரைவின் இந்திரபோகம் விழைதர - விரைவாக இந்திர போகத்தை விரும்பிட; கரையிலாத பெருவளம் கண்ணினார் - அளவில்லாத இன்பப் பெருவளத்தைத் துய்த்தனர். |
(6) |