9623. | இன்ன தன்மை அமைந்த இராக்கதர் |
| மன்னன் மாடு வந்து எய்தி வணங்கினார், |
| அன்ன சேனை களப் பட்ட ஆறு எலாம் |
| துன்னு தூதர் செவியிடைச் சொல்லுவார்: |
|
இன்ன தன்மை அமைந்த இராக்கதர் மன்னன் மாடுவந்து- இத்தகைய போகத்தைத் துய்க்கும் இராக்கதர்களின் அரசனாம் இராவணனிடத்து வந்து; எய்தி வணங்கினார்- அடைந்து தொழுதனர்; அன்ன சேனை - அத்தன்மையான மூலப்படை முழுதும்; களப்பட்ட ஆறு எலாம் - போர்க்களத்தில் இறந்துபட்டதெல்லாம்; துன்னு தூதர் - இராவணனை அடைந்த தூதுவர்; செவியிடைச் சொல்லுவார்- செவியில் மறை பொருளாகக் கூறுவார். |
(7) |
9624. | நடுங்குகின்ற உடலினர், நா உலர்ந்து |
| ஒடுங்குகின்ற உயிர்ப்பினர், உள் அழிந்து |
| இடுங்குகின்ற விழியினர், ஏங்கினார், |
| பிடுங்குகின்ற உரையினர், பேசுவார்: |
|
நடுங்குகின்ற உடலினர்- நடுங்கும் உடல் உடையவராய்; நாஉலர்ந்து - நாக்கு வறந்து; ஒடுங்குகின்ற உயிர்ப்பினர்- சோர்கின்ற மூச்சுடையவராய்; உள் அழிந்து- உள்ளம் அழிந்து; இடுங்குகின்ற விழியினர்- சுருங்கிய கண்ணினராய்; ஏங்கினார்- ஏங்கி நின்றவராய்; பிடுங்குகின்ற மொழியினர் பேசுவார்- சொல் தடுமாறு சொற்களை வலிதிற் பிடுங்குபவர் போல் கூறினர். |
(8) |
அறுசீர் ஆசிரிய விருத்தம் |
9625. | 'இன்று யார் விருந்து இங்கு உண்பார்? - இகல் |
| முகத்து இமையோர் தந்த |
| வென்றியாய்!- ஏவச் சென்ற ஆயிர வெள்ளச் |
| சேனை |
| நின்றுளார் புறத்தது ஆக, இராமன் கை நிமிர்ந்த |
| சாபம் |
| ஒன்றினால், இரண்டு மூன்று கடிகையின் உலந்தது' |
| என்றார். |