இகல்முகத்து இமையோர் தந்த வென்றியாய்- போரில் விண்ணவர் அளித்த வெற்றி பெற்ற அரசே!; ஏவச் சென்ற ஆயிர வெள்ளச் சேனை- நீ ஆணையிடப் போர் புரியச் சென்ற ஆயிர வெள்ளம் ஆகிய படை; புறத்தது ஆக நின்றுளார் - போர்க்களத்தில் ஓர்புறமாக நிற்க; இராமன் கைநிமிர்ந்த சாபம் ஒன்றினால்- இராமன் திருக்கரத்திலே விளங்கும் வில் ஒன்றினால்; இரண்டு மூன்று கடிகையின் உலர்ந்தது - ஆறு நாழிகைப் பொழுதில் சேனை முழுதும் அழிந்தது; இன்று யார் விருந்து இங்கு உண்பார் என்றார்- இப்போது யாரிங்கு விருந்துண்பார்கள் என்று கேட்டனர். |
(9) |
9626. | 'வலிக் கடன் வான் உளோரைக் கொண்டு நீ |
| வகுத்த போகம், |
| ''கலிக் கடன் அளிப்பல்'' என்று நிருதர்க்குக் |
| கருதினாயேல், |
| பலிக் கடன் அளிக்கற்பாலை அல்லது, உன் |
| குலத்தின்பாலோர் |
| ஒலிக் கடல் உலகத்து இல்லை; ஊர் உளார் உளரே |
| உள்ளார்.* |
|
வலிக்கடன் வான் உளோரைக் கொண்டு - கட்டளையாக கடமையை செய்யும் விண்ணுளோரைக் கொண்டு; நீ வகுத்த போகம்- நீ உண்டாக்கிய போகத்தை; கலிக்கடன் அனிப்பல் என்று- மகிழ்ச்சியின் முறைமையால் அளிப்பேன் என; நிருதர்க்குக் கருதினாயேல் - அரக்கர்க்கு அளிக்க எண்ணினால்; பலிக்கடன் அளிக்கற்பாலை அல்லது - இறந்தவர்க்குச் செய்யும் பலிக்கடனளிக்கத் தக்காய் என்பதல்லது; உன் குலத்தின் பாலோர் - உன் குலத்தினைச் சேர்ந்தவர்கள்; ஒலிக்கடல் உலகத்து இல்லை - ஒலிக்கின்ற கடல் சூழ்ந்த உலகத்தில் யாரும் இல்லை; ஊர் உளார் உளரே உள்ளார் - ஊரில் உள்ளவர்கள்தாம் உயிருள்ளவராக இருக்கின்றனர் (எனத் தூதுவர் கூறினர்.) |
(10) |
இராவணன் தூதர் பேச்சை ஐயுற்றுக் கூறுதல் |
9627. | ஈட்ட அரும் உவகை ஈட்டி இருந்தவன், இசைத்த |
| மாற்றம் |
| கேட்டலும், வெகுளியோடு துணுக்கமும் இழவும் கிட்டி, |