''உண்மை பேசியதாக உங்கள் நினைப்போ'' என்றான் இராவணன். |
(12) |
9629. | கேட்டு அயல் இருந்த மாலி, 'ஈது ஒரு கிழமைத்து |
| ஆமோ? |
| ஓட்டு உறு தூதர் பொய்யே உரைப்பரோ? உலகம் |
| யாவும் |
| வீட்டுவது இமைப்பின் அன்றே, வீங்கு எரி? விரித்த |
| எல்லாம் |
| மாட்டுவன் ஒருவன் அன்றே, இறுதியில் மனத்தால்?'' |
| என்றான். |
|
கேட்டு அயல் இருந்தமாலி- (தூதுவரை ஐயுற்று இராவணன் கூறியதைக்) கேட்டுப் பக்கத்திலிருந்த மாலியவான்; ஈது ஒரு கிழமைத்து ஆமோ- (இராவணனை நோக்கி) இவ்வாறு கேட்பது ஒரு முறைமையுடையது ஆகுமோ?; ஓட்டு உறு தூதர் பொய்யே உரைப்பரோ- நாம் விடுத்த தூதர் பொய் சொல்லுவார்களோ; உலகம் யாவும் - எல்லா உலகங்களும்; வீங்குஎரி வீட்டுவது இமைப்பின் அன்றே- ஊழித்தீ இமைப் பொழுதில் அழிந்து விடும் அல்லவா; விரித்த எல்லாம் - விரிந்து கிடக்கும் உலகங்கள் எல்லாம்; இறுதியில் மனத்தால் - ஊழியின் முடிவில் மனத்தால் நினைத்தவுடன்; ஒருவன் மாட்டுவன் அன்றே- உருத்திரன் அழிப்பான் அல்லவா. |
(13) |
9630. | ' ''அளப்ப அரும் உலகம் யாவும் அமைத்துக் காத்து |
| அழிக்கின்றான் தன் |
| உளப் பெருந் தகைமைதன்னால் ஒருவன்'' என்று |
| உண்மை வேதம் |
| கிளப்பது கேட்டும் அன்றே? ''அரவின்மேல் கிடந்து, |
| மேல் நாள், |
| முளைத்த பேர் இராமன்'' என்ற வீடணன் மொழி |
| பொய்த்து ஆமோ? |
|
அளப்ப அரும் உலகம் யாவும்- அளந்து கூற முடியாத எல்லா உலகமும்; அமைத்துக் காத்து அழிக்கின்றான் - படைத்து அளித்து அழிப்பதும்; தன்உளப் பெருந்தகைமை தன்னால் ஒருவன் - தன் உள்ளத்தின் பெருமையால் தான் ஒருவனே செய்வன; என்று |