உண்மை வேதம்- என உண்மை கூறும் வேதம்; கிளப்பது கேட்டும் அன்றே - சொல்வதைக் கேட்டுள்ளோம் அல்லவா; அரவின் மேல் கிடந்து - ஆதிசேடன் மேல் படுத்து; மேல் நாள் முளைத்த போர் இராமன்- பின்பு அயோத்தியில் பிறந்த போராற்றல் மிக்க இராமன்; என்று வீடணன் மொழி - என்று கூறிய வீடணன் சொற்கள்; பொய்த்து ஆமோ- பொய்ம்மை உடையது ஆகுமோ (ஆகாது.) |
(14) |
9631. | 'ஒன்று இடின் அதனை உண்ணும் உலகத்தின் |
| உயிர்க்கு ஒன்றாத |
| நின்றன எல்லாம் பெய்தால், உடன் நுங்கு நெருப்பும் |
| காண்டும்; |
| குன்றொடு மரனும், புல்லும், பல் உயிர்க் குழுவும், |
| கொல்லும் |
| வன் திறல் காற்றும் காண்டும்; வலிக்கு ஒரு வரம்பும் |
| உண்டோ? |
|
ஒன்று இடின் அதனை உண்ணும் - ஏற்ற ஓருணவை இட்டால் அதனை உண்கின்ற; உலகத்தின் உயிர்க்கு ஒன்றாத - உலக உயிர்களுக்குப் பொருந்தாத; நின்றன எல்லாம் பெய்தால் - எல்லாவற்றையும் இட்டால்; உடன் நுங்கு நெருப்பும் காண்டும் - ஒருங்கே உண்ணும் தீயைக் காண்கின்றோம்; குன்றொடு மரனும் புல்லும் - மலையொடு மரமும் புல்லும் முதலிய; பல்லுயிர் கொல்லும் - பல உயிர்களைக் கொல்லும் ஆற்றல் உள்ள; வன்திறல் காற்றும் காண்டும் - வலிமை கொண்ட காற்றையும் காண்கின்றோம்; வலிக்கு ஒரு வரம்பும் உண்டோ - (ஆதலால்) வலிமைக்கு ஒரு கட்டுப்பாடு உண்டா? (இல்லை). |
(15) |
9632. | 'பட்டதும் உண்டே உன்னை, இந்திரச் செல்வம்;பற்று |
| விட்டதும் மெய்ம்மை; ஐய! மீட்டு ஒரு வினையும் |
| இல்லை; |
| கெட்டது, உன் பொருட்டினாலே, நின்னுடைக் கேளிர் |
| எல்லாம்; |
| சிட்டது செய்தி' என்றான்; அதற்கு அவன் சீற்றம் |
| செய்தான். |