பக்கம் எண் :

 இராவணன் களம் காண் படலம்251

ஐய- ஐயனே!; பட்டதும் உண்டே- மூலப்படை அழிந்தது
உண்மையே;  உன்னை இந்திரச் செல்வம் பற்று விட்டதும்
மெய்ம்மை- உன்னை  விட்டு  இந்திரச்  செல்வமானது பற்று
விட்டு விட்டதும் உண்மையே; மீட்டு ஒரு வினையும் இல்லை -
இனிச் செய்வதற்குரிய வேறு ஒரு செயலும் இல்லை; நின்னுடைக்
கேளிர் எல்லாம்
- உன்னுடைய உறவினர் யாவரும்; கெட்டது
உன் பொருட்டினாலே
- இறந்தது உன் காரணமாகவே; சிட்டது
செய்தி
- எனவே சிறந்ததைச் செய்வாயாக; என்றான்- என்று
மாலிய வான் கூறினான்; அதற்கு அவன் சீற்றம் செய்தான்-
அதைக் கேட்டு இராவணன் கோபம் கொண்டான். 
 

(16)
 

9633.

'இலக்குவன்தன்னை வேலால் எறிந்து, உயிர்

கூற்றுக்கு ஈந்தேன்;

அலக்கணில் தலைவர் எல்லாம் அழுந்தினர்;

அதனைக்கண்டால்,

உலக்குமால் இராமன்; பின்னர் உயிர்ப் பொறை

உகவான்; உற்ற

மலக்கம் உண்டாகின் ஆக; வானை என் வயத்தது'

என்றான்.

 

இலக்குவன்  தன்னை  வேலால்  எறிந்து- இலக்குவனை
வேல் கொண்டு எறிந்து; உயிர் கூற்றுக்கு ஈந்தேன்- அவனுயிரை
யமனுக்குக்  கொடுத்தேன்; அலக்கணில்  தலைவர்  எல்லாம்
அழுந்தினர்
  -  வானரத்  தலைவர்  யாவரும்   அவனிறந்த
துன்பத்தில்   அழுந்தி   விட்டனர்;   அதனைக் கண்டால்-
இலக்குவன் இறந்த  நிலையைப்  பார்த்தால்; இராமன் உலக்கும்
- இராமன்  வற்றுவான்; பின்னர் உயிர்ப்  பொறை உகவான் -
பின்பு  உயிருடன்  இருப்பதை  விரும்ப  மாட்டாது   இறப்பான்;
உற்றமலக்கம் உண்டாகின் ஆக  -  எனக்கு நேர்ந்த துன்பம்
உண்மையாயின் ஆகுக; வாகை என் வயத்தது என்றான்- வெற்றி
என் பக்கமே என்று இராவணன் கூறினான். 
 

(17)
 

9634.

ஆண்டு அது கண்டு நின்ற தூதுவர், ஐய! மெய்யே
மீண்டது, அவ் அளவின் ஆவி, மாருதி மருந்து 

மெய்யில்