பக்கம் எண் :

252யுத்த காண்டம் 

தீண்டவும்; தாழ்த்தது இல்லை; யாரும் அச்

செங்கணானைப்

பூண்டனர் தழுவிப் புக்கார்; காணுதி போதி' என்றார்.
 

ஆண்டு அது கண்டு நின்ற தூதுவர்- அங்கு அதைப் பார்த்த
நின்ற தூதுவர்; ஐயா அந்த  இளவல் ஆவி - ஐயனே! இராமனின்
தம்பியாம்   இலக்குவனின் உயிர்; மாருதி   மருந்து  மெய்யில்
தீண்டவும்
- அனுமன் கொணர்ந்த மருந்து உடம்பில் பட்டவுடன்;
தாழ்ந்தது இல்லை மீண்டது- சிறிதும் தாழ்க்காமல்   மீண்டது;
அச்செங்கணானை யாரும் பூண்டனர் தழுவிப் புக்கார்- சிவந்த
கண்ணுடைய இலக்குவனை எல்லோரும் சூழ்ந்து தழுவிக்  கொண்டு
சென்றனர்; காணுதி போதி என்றார்- சென்று பார்ப்பாயாக என்று
கூறினர். 
 

(18)
 

9635.

தேறிலன் ஆதலானே, மறுகுறு சிந்தை தேற,
ஏறினன், கனகத்து ஆரைக் கோபுரத்து உம்பர் எய்தி,
ஊறின சேனை வெள்ளம் உலந்த பேர் உண்மை

எல்லாம்,

காறின உள்ளம் நோவ, கண்களால் தெரியக்

கண்டான்.

 

தேறிலன்- தூதர் சொன்னதை உண்மையென இராவணன்
தெளிவு  பெறவில்லை; ஆதலானே மறுகுறு   சிந்தை தேற-
ஆதலால் கலக்கமுற்ற  எண்ணம் தெளிய;  கனகத்து ஆரைக்
கோபுரத்து உம்பர் ஏறினன்
- பொன்னால் செய்யப் பெற்ற உயர்
கோபுரத்தின் மீது ஏறினான்; எய்தி ஊறின சேனை வெள்ளம்
உலந்த பேர் உண்மை எல்லாம்
- அடைந்து பெருகிய சேனை
வெள்ளம் அழிந்த பெரிய உண்மை முழுதும்; காறின உள்ளம்
நோவ
- செருக்குற்ற தன் மனம் வருந்த; கண்களால் தெரியக்
கண்டான்
- கண்களால் தெளிவாகப் பார்த்தான். 
 

(19)
 

9636.

கொய் தலைப் பூசல் பட்டோர் குலத்தியர் குவளை

தோற்று

நெய்தலை வென்ற வாள் - கண் குமுதத்தின் நீர்மை

காட்ட,