பக்கம் எண் :

 இராவணன் களம் காண் படலம்253

கய் தலை உற்ற பூசல் கடலொடு நிமிரும்காலை,
செய்தலை உற்ற ஓசைச் செயலதும் செவியின் 

கேட்டான்.

 

கொய்தலைப் பூசல் பட்டோர் குலத்தியர்  -  பகைவரால்
கொய்யப்பட்ட (தம்  கணவரின்  தலையைக்  கண்டு   துன்புறும்
அரக்க மகளிர்; குவளை தோற்று நெய்தலை வென்ற வாள்கண்-
கரிய குவளை மலரையும் கரு நெய்தல் மலரையும்  வென்ற வாள்
போன்ற  கண்கள்;  குமுதத்தின்  நீர்மை  காட்ட  -  அழுது
சிவந்ததால் செங்குமுத  மலரின்  தன்மையைக் காட்ட; கய் தலை
உற்ற பூசல்
- தம் கையால் தம் தலையில் அடித்துக் கொண்டிருக்கும்
அழுகை ஒலி; கடலொடு நிமிருங்காலை செய்தலை உற்ற ஓசைச்
செயலதும்
- கடல்கள் எல்லாம் பொங்கிய காலத்து எழும் ஓசை
செய்யும் தன்மையை; செவியின் கேட்டான்- இராவணன் தன்
காதாற் கேட்டான். 
 

(20)
 

9637.

எண்ணும் நீர் கடந்த யானைப் பெரும் பிணம் ஏந்தி,

யாணர்

மண்ணின் நீர் அளவும் கல்லி, நெடு மலை பறித்து,

மண்டும்

புண்ணின் நீர் ஆறும், பல் பேய்ப் புதுப் புனல் ஆடும்

பொம்மல்,

கண்ணின் நீர் ஆறும், மாறாக் கருங் கடல் மடுப்பக்

கண்டான்.

 

எண்ணும் நீர் கடந்த யானைப் பெரும் பிணம் ஏந்தி -
எண்ணும் தன்மையைக் கடந்த யானையின் பெரும் பிணங்களை
ஏந்திக் கொண்டு; யாணர் மண்ணின் நீர் அளவும் கல்லி -
புதிய ஊற்று நீர் உள்ள அளவும் தோண்டி; நெடுமலை பறித்து-
நீண்ட மலைகளைப் புரட்டி; மண்டும் புண்ணின் நீர் அறும் -
விரைந்து ஓடும் இரத்த ஆறும்; பல்பேய்ப் புதுப்புனல் ஆடும்
பொம்மல்
- பலபேய்கள் புதிய நீர் எனக்குளிக்கும் பொலிவுடைய;
கண்ணின் நீர் ஆறும் - கண்ணில் வடியும் ஆறும்; மாறாக்
கருங்கடல் மடுப்பக் கண்டான்
- தம் தன்மை மாறாது கரிய
கடலில் புகுந்து கலப்பதை இராவணன் பார்த்தான்.