பக்கம் எண் :

254யுத்த காண்டம் 

எண்ணிப்  பார்த்துப்   பின்  அவற்றின்  எண்ணிக்கையைக்
கண்டு அறிய முடியாத அளவு பெருக்கமுள்ள யானைகள் என்றார்.
யானைப்  பிணம்   ஏந்தி,  ஊற்று  நீர்  உள்ளளவும் தோண்டிச்
சென்று மலைகளைப் புரட்டிய இரத்த ஆறும் கரைகளை இழந்த
கண்ணீர் ஆறும் கருங்கடலுள் சேர்ந்தன.
 

கல்லுதல் - தோண்டுதல், மறித்தல்  - புரட்டுதல், பொம்மல் 
- பொலிவு, மாறா - எதிர் மறைப் பெயரெச்சம். 
 

(21)
 

9638.

குமிழி நீரோடும், சோரிக் கனலொடும், கொழிக்கும்

கண்ணான்

தமிழ் நெறி வழக்கம் அன்ன தனிச் சிலை வழக்கில்

சாய்ந்தார்

அமிழ் பெருங் குருதி வெள்ளம் ஆற்று வாய்முகத்தின்

தேக்கி,

உமிழ்வதே ஒக்கும் வேலை ஓதம் வந்து உடற்றக்

கண்டான்.

 

குமிழி நீரோடும் - குமிழி இட்டுப் பெருகும் கண்ணீரோடும்;
சோரிக்கனலொடும்  -  சின நெருப்புக் கக்கும் இரத்தத்தோடும்;
கொழிக்கும் கண்ணான்- பெருகும் கண்களையுடைய இராவணன்;
தமிழ்நெறி வழக்கம் அன்ன- தமிழ்க்குரிய அகப்பொருள் கூறும்
பெருகிய வழக்கம் போன்று; தனிச்சிலை வழக்கில் சாய்ந்தார்-
ஒப்பற்ற  வில்  விடுத்த  அம்பினால்  இறந்தவர்களின்;   அமிழ்
பெருங்குருதி வெள்ளம் ஆற்றுவாய்
- அமிழும் மிகுந்த இரத்த
வெள்ளத்தை   கடலில் ஆறு கலக்கும்  சங்கமுமாகிய வாயினால்;
முகத்தின் தேக்கி  -  முகத்திலே தேக்கி  வைத்து; உமிழ்வதை
ஒக்கும்
  -  துப்புவதைப் போன்றிருக்கும்;  வேலை ஓதம் வந்து
உடற்றக் கண்டான்
- (இரத்தம் கலந்த) கடலின் அலைகள் வந்து
போர்க்களத்தில் மோதிடப் பார்த்தான்.
 

தமிழ் நெறி வழக்கம் என்பது தமிழின் பொருளிலக் கணத்தில்
காணப் பெறும் அகப் பொருள் நெறியாகும். அது களவு, கற்பு என
இருவகைப்படும். இதில் களவு நெறி பலவகையாக விரிந்து  பரந்து 
நிற்றல் போல் இராமனின் அம்பும், அரக்கர் மீது   ஒன்று பத்தாக
நூறாகப்  பரந்து   பாய்ந்து செல்லும் எனப் புதிய   உவமையைப்
படைத்துள்ளார். தமிழ் நெறி வழக்கம் உலகம் அளாவியது; இராமன்
வில்லிடும் அம்பும் உலகளாவியது எனினும் ஆம். 
   

(22)