9639. | விண்களில் சென்ற வன் தோள் கணவரை, அலகை |
| வெய்ய |
| புண்களில் கைகள் நீட்டி, புது நிணம் கவர்வ நோக்கி, |
| மண்களில் தொடர்ந்து, வானில் பிடித்து, வள் |
| உகிரின் மானக் |
| கண்களைச் சூன்று நீக்கும் அரக்கியர் குழாமும் |
| கண்டான்.* |
|
விண்களில் சென்ற - (போரில் இராமன் விடுத்த அம்பால் இறந்து) வானுலகில் புகுந்த; வன்தோள் கணவரை- வலிய தோளுடைய கணவர் உடலிலுள்ள; அலகை வெய்ய புண்களில் கைகள் நீட்டி- பேய்கள் இறந்தவர் உடலில் விரும்பத் தக்க புண்களில் தம் கைகளை நீட்டி; புதுநிணம் கவர்வ நோக்கி - புதிய கொழுப்பைக் கவர்வதைக் கண்டு; மண்களில் தொடர்ந்து - அப்பேய்களைத் தரையில் துரத்திச் சென்று; வானில் பிடித்து - (பேய்கள் பறக்க) வானத்தில் தொடர்ந்து சென்று பிடித்து; வள் உகிரின் - பெரிய நகங்களால்; மானக் கண்களை - பெரிய கண்களை; சூன்று நீக்கும் - தோண்டி எடுத்து நீக்குகின்ற; அரக்கியர் குழாமும் கண்டான் - அரக்கியர் கூட்டத்தையும் பார்த்தான் இராவணன். |
(23) |
9640. | விண் பிளந்து ஒல்க ஆர்க்கும் வானரர் வீக்கம் |
| கண்டான்; |
| மண் பிளந்து அழுந்த ஆடும் கவந்தத்தின் வருக்கம் |
| கண்டான்; |
| கண் பிளந்து அகல நோக்கும் வானவர் களிப்பும் |
| கண்டான்; |
| புண் பிளந்தனைய நெஞ்சன் கோபுரத்து இழிந்து |
| போந்தான். |
|
விண்பிளந்து ஒல்க ஆர்க்கும்- வானுலகம் பிளந்து அசையுமாறு ஆரவாரிக்கும்; வானரர் வீக்கம் கண்டான்- வானர வீரர்களின் பெருக்கத்தைப் பார்த்தான்; மண்பிளந்து அழுந்த - மண்உலகம் பிளவுற்று அழுந்துமாறு; ஆடும் கவந்தத்தின் வருக்கம் கண்டான்- ஆடுகின்ற தலையற்ற உடல்களின் கூட்டத்தைப் பார்த்தான்; கண் பிளந்து அகல நோக்கும்- கண்களை அகலமாகத் திறந்து போர்க்களத்தைப் பார்க்கும்; வானவர் களிப்பும் கண்டான்- தேவர்களின் மகிழ்ச்சியையும் பார்த்தான்; புண் பிளந்தனைய |