முறைப்படி செய்து; திருமறை புகன்ற தானம்- சிறந்த வேதங்கள் கூறும் தானங்களை; வீசினன் இயற்றி- வீசிக் கொடுத்து; மற்றும் - மேலும்; வேட்டன வேட்டோக்கு எல்லாம்- விரும்பியவற்றை விரும்பியவர்க்கெல்லாம்; ஆசு அற நல்கி - குற்றமின்றிக் கொடுத்து; ஒல்காப் போர்த்தொழிற்கு- தளராத போர்வினைக்கு அமைவது ஆனான்- பொருந்தியவன் ஆனான். |
(3) |
கலித்துறை |
9645. | அருவி அஞ்சனக் குன்றிடை ஆயிரம் அருக்கர் |
| உருவினோடும் வந்து உதித்தனர் ஆம் என ஒளிர, |
| கருவி நான்முகன் வேள்வியில் படைத்ததும், சுட்டிச் |
| செருவில் இந்திரன் தந்த பொன் கவசமும், |
| சேர்த்தான். |
|
அருவி அஞ்சனக் குன்றிடை - நீரருவி கொண்ட கரிய மலையிலே; ஆயிரம் அருக்கர் உருவினோடும்- ஆயிரம் சூரியர் வேற்று உருவத்தோடு; வந்து உதித்தனர் ஆம் என ஒளிர- வந்து தோன்றினர் ஆம் என்று ஒளி வீச; கருவிநான் முகன் வேள்வியில் - (உலகங்களைப் படைக்கக்) கருவியான பிரமன் வேள்வியிலே; படைத்ததும் - தோற்றுவித்ததும்; சுட்டிச் செருவில் - போரில் சுட்டிய; இந்திரன் தந்த- தேவேந்திரன் அளித்த; பொன்கவசமும் சேர்த்தான்- பொற்கவசமும் அணிந்தான். |
(4) |
9646. | வாள் வலம் பட, மந்தரம் சூழ்ந்த மாசுணத்தின் |
| தாள் வலந்து ஒளிர் தமனியக் கச்சொடும் சார்த்தி; |
| கோள் வலந்தன குவிந்தன ஆம் எனும் கொள்கை |
| மீள்வு இல் கில்புரி மணிக் கடி சூத்திரம் வீக்கி; |
|
வாள் வலம்பட- உடைவாளை வலமாகப் பொருந்தச் சேர்த்தி; மந்தரம் சூழ்ந்த மாசுணத்தின் - மந்தரமலையைச் சூழ்ந்த (வாசுகி எனும்) பாம்பு போல; தாள் வலந்து ஒளிர் - முயற்சியால் சுற்றப்பட்டு ஒளி வீசும்; தமனியக் கச்சொடும் சார்த்தி - பொன்னாலான கச்சிலே சேர்த்தி; வலந்தன கோள் குவிந்தன - வலம் வரும் கிரகங்கள் குவிந்தன; ஆம் எனும் கொள்கை- ஆகுமென்ற கொள்கை; மீள்வு இல் - மீளுதல் இல்லாத; கிம்புரி - |