பக்கம் எண் :

26யுத்த காண்டம் 

கலை - கலை, அறிவையும் குறித்ததென்க. ''எத்தவம் செய்தேன்''  
என்றவிடத்துத்   ''தவம்''   என்ற   சொல்     எதிர்மறையாய்ப் 
பாவத்தைக் குறித்தது. 
 

(47)
 

9233.

'ஐயனே! அழகனே! என் அரும் பெறல் அமிழ்தே! 

ஆழிக்

கையனே, மழுவனே, என்று இவர் வலி கடந்த கால 

மொய்யனே!- முளரி அன்ன நின் முகம்  

கண்டிலாதேன்,

உய்வெனோ?- உலகம் மூன்றுக்கு ஒருவனே! செரு

வலோனே!

 

ஐயனே! அழகனே! என் அரும் பெறல் அமிழ்தே- என் ஐயனே!
அழகிற்  சிறந்தவனே!  என்   பெறுதற்கரிய  அமிழ்தம்  போன்றவனே;
ஆழிக் கையனே, மழுவனே என்று- சக்கரப் படையை ஏந்திய கையை
உடைய  திருமாலும்,  மழுப்படையை  உடைய  சிவனும்;  என்று இவர்
வலி  கடந்த கால மொய்யனே!
- என்று  சொல்லப்படுகின்ற  (முதல்
தேவர்களாகிய)  இவர்களின்  வலிமையை  வெற்றி  கொண்ட எமனைப்
போன்ற  வலிமையை உடையவனே!  உலகம்  மூன்றுக்கு  ஒருவனே!
செருவலோனே!
- உலகம்  மூன்றினுக்கும்  ஒருவனாய்ச்  சிறந்தவனே!
போரில்  வல்லவனே; முளரி  அன்ன  நின்  முகம்  கண்டிலாதேன்
உய்வெனோ
- தாமரை  மலர் போன்ற நினது  முகத்தைக்  கண்டிலாத
யான் உயிர் வாழ்ந்திருப்பேனோ? (வாழேன்).
 

ஆழி - சக்கரம், ஆழிக்கையன் - திருமால், மழுவன் - சிவன், 
செரு - போர். 
 

(48)
 

9234.

'தாள் அரிச் சதங்கை ஆர்ப்பத் தவழ்கின்ற 

பருவம்தன்னில்,

கோள் அரி இரண்டு பற்றிக் கொணர்ந்தனை; 

கொணர்ந்து, கோபம்

மூளுறப் பொருத்தி, மாட முன்றினில் முறையின் ஓடி 

மீள அரு விளையாட்டு இன்னம் காண்பெனோ, 

விதியிலாதேன்!

 

தாள் அரிச் சதங்கை ஆர்ப்பத் - (நின்) காலில் பரலோடு
கூடிய சதங்கை ஆரவாரிக்க;  தவழ்கின்ற பருவம் தன்னில் -