பக்கம் எண் :

260யுத்த காண்டம் 

கிம்புரி   போன்ற  வட்டவடிவமைந்த; மணிக் கடி சூத்திரம்
வீக்கி
  -  இரத்தினத்தாலமைந்த   கடி  சூத்திரத்தைக் கட்டி. 
 

(5)
 

9647.

மறை விரித்தன்ன மாடுறு மான மாக் கலுழன்
சிறை விரித்தன்ன கொய்சகம் மருங்கு உறச் 

சேர்த்தி;

முறை விரித்தன்ன முறுக்கிய கோசிக மருங்கில்
பிறை விரித்தன்ன வெள் எயிற்று அரவமும் 

பிணித்து;

 

மறை விரித்துள்ள- வேதங்களை விரித்தாற்போல; மாடுறு
மானமாக் கலுழன்
  -  அருகிலிருந்த பெருமை மிகுந்த பெரிய
கருடன்;  சிறை  விரித்தன்ன கொய்சகம்- சிறகை விரித்தாற்
போன்ற  கோசிகத்தின்;  மருங்குறச்  சேர்த்தி  - இடத்திலே 
சேர்த்து; முறுக்கிய  கோசிக  மருங்கில்  -  முறுக்கமைந்த
வெண்பட்டாடையை இடையிலே; முறை விரித்தன்ன- முறையாக
விரித்தாற் போல; பிறை விரித்தன்ன - பிறையை வெளியிட்டாற்
போல; வெள்எயிற்று அரவமும் பிணித்து  -  வெண்மையான
பற்களையுடைய பாம்பைக் கட்டி. 
 

(6)
 

9648.

மழைக் குலத்தொடு வான் உரும்ஏறு எலாம் வாரி
இழைத் தொடுத்தன அனைய வாள் உடை மணி 

ஆர்த்து;

முழைக் கிடந்த வல் அரிஇனம் முழங்குவ போல்வ
தழைக்கும் மின் ஒளிப் பொன் மலர்ச் சதங்கையும்

சாத்தி;

 

மழைக் குலத்தொடு- மேகக் கூட்டத்தின் உறையும்; வான்உரும்
ஏறு எல்லாம் வாரி
  -  மேலான  இடிகள்   எல்லாவற்றையும் வாரி;
இழைத் தொடுத்தன அனைய- செவ்விய முறையில் தொகுத்தமைத்தது
போன்ற; வாள்   உடை மணி ஆர்த்து  -  வாளையும் உடையையும்,
மணியையும் கட்டி; முழைக்கிடந்த  வல்  அரிஇனம்  -  குகையில்
உறங்கும் வலிய சிங்கக் கூட்டம்; முழங்குவ போல்வ - முழங்குவதைப் 
போன்றன; தழைக்கும் மின்ஒளிப் பொன்மலர்ச் சதங்கையும் சாத்தி
-  மிகுகின்ற  மின்னல்  போன்ற  ஒளியுடைய  பொன்மலர்  போன்ற
சதங்கைகளையும் அணிந்து. 
 

(7)