9649. | உரும் இடித்த போது அரவு உறு மறுக்கம், வான் |
| உலகின் |
| இரு நிலத்திடை, எவ் உலகத்திடை, யாரும் |
| புரிதரப் படும் பொலங் கழல் இலங்குறப் பூட்டி; |
| சரியுடைச் சுடர் சாய் நலம் சார்வுறச் சாத்தி; |
|
உரும் இடித்த போது - இடி இடித்த போழுது; அரவுஉறு மயக்கம்- பாம்பு அடைந்த கலக்கம்; வான்உலகின் இருநிலத்தடை - விண் உலகிலும் பெரிய பூமியிலும்; எவ்வுலகத்திடை - எந்த உலகத்திலும்; யாரும் புரிதரப்படும் - யாவரும் அடையுமாறு ஒலிக்கும்; பொலங்கழல் இலங்குறப் பூட்டி - பொற்கழல்களை விளங்கும் வகையில் அணிந்து; சரியுடைச் சுடர் சாய்நலம் - சரிந்த உடையில் சுடர் வீழ்வதால் உண்டாகும் அழகு; சார்வுறச் சாத்தி - மேலும் விளங்க அணிந்து. |
(8) |
9650. | நால் - அஞ்சு ஆகிய கரங்களில் நனந் தலை |
| அனந்தன் |
| ஆலம் சார் மிடற்று அருங் கறை கிடந்தென, |
| இலங்கும் |
| கோலம் சார் நெடுங் கோதையும் புட்டிலும் கட்டி; |
| தாலம் சார்ந்த மாசுணம் எனக் கங்கணம் தழுவ; |
|
நால் அஞ்சு ஆகிய கரங்களில் - இருபது கைகளில்; நனந்தலை அனந்தன் - பெரிய தலையையுடைய அனந்தனின்; ஆலம்சார் மிடற்று அருங்கறை கிடந்தென - நஞ்சு தங்கிய கழுத்தில் அரிய கறை கிடந்தது போல; இலங்கும் - விளங்குகின்ற; கோலம்சார் நெடுங்கோதையும் - அழகுமிக்க நீண்ட தோற்கட்டும்; புட்டிலும் கட்டி - விரற்புட்டிலும் கட்டி; தாலம் சார்ந்த மாசுணம் என - நீண்ட நாவுடைய பாம்பு போல; கங்கணம் தழுவ- கங்கணத்தை அணிந்து; |
(9) |
9651. | கடல் கடைந்த மால் வரையினைச் சுற்றிய |
| கயிற்றின் |
| அடல் கடந்த தோள் அலங்கு போர் வலயங்கள் |
| இலங்க; |
| உடல் கடைந்த நாள் ஒளியவன் உதிர்த்த பொன் |
| கதிரின் |
| சுடர் தயங்குற, குண்டலம் செவியிடைத் தூக்கி; |