பக்கம் எண் :

 இராவணன் தேர் ஏறு படலம்263

முற்றியதற்கு   ஒப்ப; முத்தக் குடை இமைப்ப  - முத்துக்கள்
தொங்கும் வெண்கொற்றக் குடை விளங்கவும். 
 

(12)
 

9654.

பகுத்த பல் வளக் குன்றினில் முழை அன்ன பகு 

வாய்

வகுத்த வான் கடைக் கடைதொறும் வளை எயிற்று

ஈட்டம்,

மிகுத்த நீல வான் மேகம் சூழ் விசும்பிடை, தசும்பூடு
உகுத்த செக்கரின் பிறைக் குலம் முளைத்தன ஒக்க;
 

பகுத்த  பல்வளக்  குன்றினில்  -  வகை செய்யப்பட்ட
பலவளங்களுடைய குன்றில்; முழை அன்ன பகுவாய் - குகை
போன்ற பிளந்தவாயிலே; வகுத்த வான்கடைக் கடைதொறும்-
வகுக்கப் பெற்ற பெரிய கடைவாய் தோறும் கடை வாய்தோறும்
வளைஎயிற்று ஈட்டம்- வளைந்த பற்களின் கூட்டம்; மிகுத்த
நீலவான் மேகம் சூழ்
- மிகுதியாகவுள்ள நீல நிறமுள்ள பெரிய
மேகங்கள் சூழ்ந்த; விசும்பிடை- வானத்தில்; தசும்பூடு உகுத்த
-  பாலிகைக்  கலன்களில் தூவிய; செக்கரின் பிறைக்குலம்-
சிவந்த  வானில்  பிறைக்  கூட்டம்;   முளைத்தன   ஒக்க -
முளைத்தவற்றை ஏத்திருக்க. 
 

(13)
 

9655.

ஒத்த தன்மையின் ஒளிர்வன, தரளத்தின் ஓதம்
தத்துகின்றன, வீர பட்டத் தொகை தயங்க;
முத்த ஓடைய முரண் திசை முழு மத யானை
பத்து நெற்றியும் சுற்றிய பேர் எழில் படைக்க;
 

ஒத்த  தன்மையின் ஒளிர்வன  - இயைந்த தன்மையோடு
ஒளிவீசுவன; தரளத்தின் ஓதம் தத்துகின்றன  - முத்துக்களின்
ஒளி  அலை   வீசுகின்றன;   வீரபட்டத்  தொகை தயங்க -
வீரபட்டத் தொகை விளங்குவதால்; ஒத்த ஒடைய முரண் திசை
முழுமத யானை
  - சிறப்பால் ஒத்த முகபடாம்களை முரண்பட்ட
எட்டுத்   திக்குகளிலும்   உள்ள    நிரம்பிய  மதம்  பொழியும்
யானைகளின்; பத்து நெற்றியும்  - பத்து   நுதல்களும்; சுற்றிய
பேர்எழில் படைக்க
  -   சூழ்ந்த   பெருமைமிக்க    அழகை
உண்டாக்கவும். 
 

(14)
 

9656.

புலவி மங்கையர் பூஞ் சிலம்பு அரற்று அடி போக்கி,
தலைமை கண்ணினர்த் தாழ்கிலா மணி முடித் 

தலங்கள்