பக்கம் எண் :

264யுத்த காண்டம் 

உலகம் ஒன்றினை விளக்குறும் கதிரினை ஓட்டி,
அலகுஇல் எவ் உலகத்தினும் வயங்கு இருள் அகற்ற;
 

புலவிமங்கையர்- புலக்கும் பெண்டிர்; பூஞ்சிலம்பு அரற்று
அடி நோக்கி
- அழகிய சிலம்புகள் ஒலிக்கும் அடியை நீக்கி;
தலைமை கண்ணினர்  -  தலைமையைக் கருதுகின்றவர்களை;
தாழ்கிலா மணிமுடித்தலங்கள்- வணங்காத இரத்தினம் பதித்த
திருமுடி சூட்டிய இடங்கள்; உலகம் ஒன்றினை விளக்குறும்-
உலகம்  ஒன்றை  விளங்கச்  செய்யும்;  கதிரினை  ஓட்டி  -
சூரியனைத் தனக்கீடாகாதென ஓடச் செய்து; அலகு இல் எவ்
உலகத்தினும்
- அளவற்ற எந்த உலகத்திலும்; வயங்கு இருள்
அகற்ற
- விளங்கும் இருளை நீக்கவும். 
 

(15)
 

9657.

நாகம் நானிலம் நான்முகன் நாடு என நயந்த
பாகம் மூன்றையும் வென்று கொண்டு, அமரர் முன்பு

அணிந்த

வாகை மாலையும் மருங்கு உற, வரி வண்டொடு 

அளவி;

தோகை அன்னவர் விழி தொடர் தும்பையும் சூட்டி;
 

நாகம்  -  சுவர்க்க லோகமும்;  நானிலம் - மண்ணுலகமும்;
நான்முகன் நாடு என  நயந்த  -  பிரமலோகம் என விரும்பிய;
பாகம் மூன்றையும்- மூன்று பகுதிகளையும்; வென்று கொண்டு-
வெற்றி  பெற்றுக்  கைக்கொண்டு;  அமரர் முன்பு  அணிந்த  -
தேவர்  முன்னர்  புனைந்திருந்த;  வாகைமாலையும்  -  வெற்றி
மாலையும்; மருங்குற- அம்மாலையின் பக்கத்தே; வரிவண்டொடு
அளவி
- கோடுகளை  உடைய வண்டுகளொடு சேர்த்து; தோகை
அன்னவர் விழிதொடர் 
- மயில் போன்ற இள மகளிர் கண்கள்
பின்தொடரப்  பெற்ற; தும்பையும்  சூட்டி -   தும்பை மலர்
மாலையும் அணிந்து. 
 

(16)
 

9658.

அகழும் வேலையை, காலத்தை, அளக்கர் நுண் 

மணலை,

நிகழும் மீன்களை, விஞ்சையை, நினைப்பது என்? 

நின்ற

இகழ்வு இல் பூதங்கள் இறப்பினும், இறுதிசெல்லாத
புகழ் என, சரம் தொலைவு இலாத் தூணி பின் பூட்டி;